எல்லோரும் ஒரு வாட்டி தனிமைச் சிறைக்குப் போங்கள் – மோடி அட்வைஸ்!

எல்லோரும் ஒரு வாட்டி தனிமைச் சிறைக்குப் போங்கள் – மோடி அட்வைஸ்!

பிரதமர் மோடி, மாதம் தோறும், லாஸ்ட் ஞாயிற்றுக்கிழமையில், ‘மான் கி பாத்’ (மனதின் குரல்) ரேடியோ நிகழ்ச்சி மூலம், மக்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், 32-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது. அப்போது பேசிய அவர், “நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மிகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்; இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும். இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், சிலை வழிபாடு செய்பவர்களும் உண்டு, சிலை வழிபாட்டை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம். இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும். நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன்.
ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன.

இன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.

ஜூன் மாதம் 5ஆம் தேதி சிறப்பான நாள் ஏனென்றால் “உலக சுற்றுச்சூழல் நாள்” என்ற முறையில் நாம் இதைக் கடைப்பிடிக்கிறோம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை connecting people to nature, இயற்கையோடு மக்களை இணைப்போம் என்பதை மையக்கருத்தாக அறிவித்திருக்கிறது. அதாவது அடிப்படைகளை நோக்கிய பயணம் என்று கொள்ளலாம்; சரி, இயற்கையோடு இணைவது என்றால் என்ன? என்னைப் பொறுத்த மட்டில், நம்மை நாம் இணைத்துக் கொள்வது, நம்மோடு நாம் இணைவது என்பது தான்.

இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால், சிறப்பான பூமியை உருவாக்குவது. இதை காந்தியடிகளை விடச் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும். காந்தியடிகள் ஒருமுறை கூறினார் – one must care about a world one will not see, நம்மால் பார்க்க முடியாத உலகத்தின் மீது அக்கறையாக இருப்பது அதாவது நம்மால் காண இயலாத உலகத்தைப் பற்றியும் அக்கறை காட்டுவது, அதனிடம் கரிசனத்தோடு இருப்பது நமது கடமை என்றார்.

இயற்கைக்கு என வல்லமை உண்டு என்பதை நீங்களே கூட அனுபவித்து உணர்ந்திருக்கலாம்; சிலவேளைகளில் நீங்கள் மிகுந்த களைப்போடு வந்திருப்பீர்கள், அப்போது நீரை வாரி எடுத்து உங்கள் முகத்தில் தெளித்துக் கொண்டால், எத்தகைய ஒரு புத்துணர்ச்சியை அடைந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்!!

அதே போல சில வேளைகளில் நீங்கள் அயர்ந்த நிலையில் வீடு திரும்பும் போது, அறையின் சாளரங்களையும் வாயிற்கதவுகளையும் திறந்து வைத்து, சுத்தமான காற்றை ஆழமாக உள்ளிழுக்கும் போது புதிய விழிப்பு உண்டாகும். எந்த பஞ்ச பூதங்களால் நம் உடல் உருவாக்கம் பெற்றிருக்கிறதோ, அது பஞ்ச பூதங்களோடு தொடர்பு கொள்ளும் போது, புதிய சக்தி வெளிப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் அனுபவித்திருக்கிறோம், ஆனால் இது நம் மனங்களில் சரியாகப் பதிவு பெறாமல் போயிருக்கலாம், இவற்றை நாம் ஓரிழையில் இணைத்துப் பார்ப்பதில்லை. இதே போல எப்போதெல்லாம் இயற்கை நிலையோடு நமக்கு தொடர்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நமக்குள்ளே புதிய விழிப்பு ஊற்றெடுக்கிறது; ஆகையால் தான் ஜூன் மாதம் 5ஆம் தேதி இயற்கையோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் உலகம் தழுவிய இயக்கம் என்பது நம்மோடு நாம் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் இயக்கமாக ஆக வேண்டும்.

ஜூன் மாதம் 21ஆம் தேதி என்பது உலகம் முழுக்க நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக ஆகி இருக்கிறது. உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகத்தார் அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி மிகக் குறுகிய காலகட்டதிலேயே உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருக்கிறது, இது உலக மக்களை இணைக்கிறது. ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை. யோகக்கலை வாயிலாக நம்மால் உலகை ஓரிழையில்இணைக்க முடியும். யோகம் என்பது எப்படி உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும்.

இன்று வாழ்க்கைமுறை காரணமாக, அவசரகதி காரணமாக, பெருகிவரும் பொறுப்புகள் காரணமாக, அழுத்தம் காரணமாக, வாழ்க்கை என்பதே பெருங்கடினமாகி விட்டது. சிறுவயதிலேயும் கூட இந்த நிலை ஏற்பட்டு விட்டதை நாம் காண்கிறோம். இணக்கமில்லா மருந்துகளை எடுத்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது என்ற காலகட்டத்தில் அழுத்தம் நீங்கிய வாழ்க்கையை வாழ யோகக்கலை நமக்கு பேருதவியாக இருக்கும். நலன், உடலுறுதி ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமருந்து யோகம். யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலால், மனதால், எண்ணங்களால், பழக்கங்களால் ஆரோக்கியம் நிறைந்த உள்ளார்ந்த பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது – அப்படிப்பட்ட உள்ளார்ந்த பயணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், அது யோகக்கலை மூலம் மட்டுமே சாத்தியமாகும். இரண்டு நாள்கள் முன்பாக யோகக்கலை நாளை முன்னிட்டு உலகின் அனைத்து அரசுகளுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நான் யோகக்கலை தொடர்பான சில போட்டிகளையும், சில பரிசுகளையும் அறிவித்திருந்தேன். மெல்ல மெல்ல இந்தத் திசையில் பணிகள் முன்னேறி வருகின்றன. எனக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த அடிப்படையான ஆலோசனை அளித்தவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

அதே போல இணைந்து யோகம் செய்யும் 3 தலைமுறையினரைப் படம் பிடியுங்கள், இது நாட்டுக்கும், உலகுக்கும் ஆர்வத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவசியம் NarendraModiAppஇல், MyGovஇல் 3 தலைமுறையினர் எங்கெல்லாம் யோகம் செய்கிறார்களோ, அந்த தலைமுறையினரை ஒன்றாகப் படம்பிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நேற்று, இன்று, நாளையின் படமாக இது அமையும். இது ஒளிமயமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தை அளிக்கும் என்று நீங்கள் எனக்கு பிரதான சேவகன் பணியை ஆற்றும் பொறுப்பை அளித்தீர்களோ? புது தில்லியின் செங்கோட்டையின் மீதிருந்து நான் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று எப்போது உங்கள் மத்தியில் உரையாற்ற எனக்கு முதல் வாய்ப்பு கிட்டியதோ? அப்போதே நான் தூய்மை பற்றிப் பேசினேன். அன்று தொடங்கி நான் பாரதம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அதே சமயம் என் நேசம்நிறை நாட்டுமக்களே, நானும் உங்களைப் போன்ற சாதாரண குடிமகன் தான், சாதாரண குடிமகன் என்ற முறையில் நல்லவை கெட்டவை என அனைத்தும், எந்த எளிய குடிமகனையும் பாதிப்பதைப் போலவே, என்னையும் பாதிக்கின்றன. ‘மனதின் குரலை’ சிலர் தரப்பு உரையாடலாகப் பார்க்கிறார்கள், சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். ஆனால் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி, பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக என்னை மாற்றும் என்று நான் இதைத் தொடங்கிய போது உள்ளபடி நினைத்துக் கூட பார்க்கவில்லை, இதை மிக நீண்ட அனுபவத்திற்குப் பிறகு நான் உணர்கிறேன்” என்று பேசினார் மோடி.

error: Content is protected !!