32°C
விளம்பரம்
Advertisement

எங்கேயோ கேட்ட குரல் ரிலீசான டேட்டுமின்று🫶

admin சேலம் Published: August 14, 2024 4 நிமிட வாசிப்பு Updated: August 14, 2026 மறக்க முடியுமா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ங்கேயோ கேட்ட குரல்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குநர் எஸ்பி.முத்துராமனிடம் விடைபெறும்போது, “இதுக்கு முன்ன ‘மூன்று முகம்’ படத்துல நடிச்சு முடிச்சதும் எனக்கே ஒரு மனச்சாந்தி தேவைப்பட்டது. அதை ‘எங்கேயே கேட்ட குரல்’ எனக்குக் கொடுத்திருக்கு. ஒரு நடிகனுக்கு மன ரீதியா அமைதியைத் தர்ற கேரக்டர்ஸ் ரொம்ப முக்கியம்னு இந்த நிமிஷத்துல மறுபடியும் உணர்றேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.” அப்படீன்னு சொன்னார் ரஜினி.

இது பத்தி எஸ்பி.எம். சொன்ன சேதியிது.

“என்னோட, பஞ்சுவோட, ரஜினியோட, ஏன்… அந்தப் படத்துல நடிச்ச சகோதரிகள் அம்பிகா, ராதா, டெல்லி கணேஷ், கமலாகாமேஷ்ன்னு ஒவ்வொருத்தரோட சினிமா வாழ்க்கையிலயும் ‘எங்கேயோ கேட்ட குரல்’ ஒரு சரித்திரம்னு நம்புறேங்க. அதுலே ரஜினியை மறுபடியும் ஒரு சென்டிமென்ட் ஹீரோவா, கேரக்டர் ஆர்டிஸ்சாக் காட்டினோம். ஆக்‌ஷன் ஹீரோவா மாறிப்போயிருந்த ரஜினி, ‘ஆக்டிங் பொட்டன்ஷியல் உள்ள நடிகர்னு தன்னை மீண்டும் நிருபித்துக் காட்டியிருந்தார். குறிப்பா, மனப் போராட்டம் நிறைந்த காட்சிகள்ல எந்த அளவுக்கு ரியலிஸ்டிக் முக பாவம் கொண்டு வருவார் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

ரஜினிக்கு மட்டும் இது உணர்வுபூர்வமான படமில்லே, அவரோட ரசிகர்கள் தியேட்டர்ல படம் பார்க்கும்போது ரொம்ப உணர்ச்சி மயமா இருந்தாய்ங்க. படம் பார்க்கும் போதே நிறையப் பேர் தலையில் அடிச்சுக்கிட்ட்டு அழுதாய்ங்க. ரஜினிக்கு இதுபோல் மீண்டும் ஒரு படம் வராதா என்று இன்றைக்கும் கேட்டுக் கிட்டிருக்க்காய்ங்கன்னா பாருங்க . ஆனால், இந்தப் படம் அகில இந்திய அளவில் விருதுபெறும் என்று எதிர்பார்த்து நாங்கள் ஏமாந்துப்புட்டோம்” ன்னு கொஞ்சம் டல்லா ஃபீல் பண்ணி சொன்னா எஸ்பி.எம்.

ஆம்..தியேட்டர்களில் ‘மூன்று முகம்’ படத்தை எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ‘எங்கேயே கேட்ட குரல்’ வெளியாகி மனதளவில் மருத்துவம் செய்தது. படத்தில் தனியாக நகைச்சுவை பகுதியோ, நகைச்சுவை நடிகர்களோகூட கிடையாது. 1982 ஆகஸ்டில் வெளியான இந்தப் படத்துக்கு முதல் ஒருவாரம் போதிய கூட்டம் வரலை. “ரஜினிக்கும் எஸ்பி.எம்முக்கும் எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை..? பாவம் பஞ்சு அருணாசலம்..! சொந்தப் படம்னு இறங்கி கையில் இருந்ததையும் விட்டுடுவார்போல இருக்கு” என்று அப்போது அனுதாபம் காட்டினாய்ங்க கோடம்பாக்கத்தில். ஆனால், செகண்ட் வீக்கிலிருந்து லேடீஸ் கூட்டம் அலைமோதிசு. 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பிடிச்சுடுச்சு எங்கேயோ கேட்ட குரல்.(கட்டிங் கண்ணையா)

கொஞ்சம் யோசிச்சுமுன்னா 80களில் இருந்த தமிழ் சினிமாவுக்கும் இன்னிய சினிமாவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்குது. குறிப்பா அந்த காலகட்டங்களில் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்ட குடும்ப கோட்பாடுகள், சமுதாய கட்டமைப்பு இவை ஒவ்வொன்னும் வேறுபட்டதாகவே இருந்துச்சு. சினிமா மூலம் தான் அன்னிய சூழல், மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் பற்றின புரிதல் இன்றைய தலைமுறையினருக்கு தெரியவருது. அதனால் அன்றைய திரைப்படங்களை நாம் அந்த காலகட்டத்துக்கு நம்மை கடத்திச்சென்று பார்க்கவேண்டியது அவசியம். அந்த வகையில் திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. அதில் ஒரு சறுக்கல் ஏற்பட்டால் அது இருபாலருக்குமே வாழ்நாள் தோல்வியாகவே பார்க்கப்படுது. அதன் பார்வையை அழகாக கடத்திய படம் ‘எங்கேயோ கேட்ட குரல்’.

வசூல் சக்கரவர்த்தியா கோலிவுட் சினிமா கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் தான் உச்சத்தில் இருந்த சமயத்திலேயே கொஞ்சம் கூட தயக்கமின்றி திருமண தோல்வி அடைஞ்ச ஒரு ஆண் கேரக்டரில் நடிச்சா நட்சத்திர அந்தஸ்து கெட்டுடும் -முன்னு இருந்த பிம்பத்தை உடைச்சு எறிந்தார். இளைஞன், நடுத்தர வயது, முதுமையை தொட்ட மனிதன் என பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை தன் இயல்பான நடிப்பால் வெளிக்கொண்டு வந்திருப்பார். குமரன் என்ற மனிதனின் வாழ்க்கையோடு நம்மை பயணிக்க வைத்திருப்பார். மகளாக அமுல் பேபி மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .. ம்பிகா மீது காதல் கொள்ளும் வாலிப ஏக்கம் ஒருபுறம் என்றால் தன் மீது மயக்கம் கொள்ளும் ராதாவிடம் காட்டும் மென்மையான ஆண்மை ஒருபக்கம் என ரஜினி நடிப்பு படு யதார்த்தமாக இருக்கும். தான் ஆசைப்பட்டவரிடம் காட்டும் காதலில் பாய்ச்சலும், தன்னை ஆசைப்பட்டவரிடம் காட்டும் காதலில் கனிவும் என ரஜினியின் நடிப்பு அட டடடடடா சூப்பர். (கட்டிங் கண்ணையா)

இசையைப் பொறுத்தவரை, “பட்டு வண்ண சேலைக்காரி” பாடல் இன்றும் செவிக்குள் தேன் பாய்ச்சும் கீதம். காதலில் தோல்வி அடைந்த ஆணை கொண்டாடிய சமூகம் திருமண தோல்வி அடைந்த ஆணை கொஞ்சம் கேலிப்பார்வை தான் பார்த்தது. எள்ளி நகையாடியது. அப்படிப்பட்ட ஒரு வேடத்தை அதுவும் ஒரு வணிக சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி ஏற்றது பெரும் ஆச்சரியம்.

‘எங்கேயோ கேட்ட குரல் ‘… 42 வருஷங்களை தாண்டியும் நாம் இன்னமும்கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குரல்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்