32°C
விளம்பரம்
Advertisement

ட்விட்டர் மீது அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும் எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்புகள்!

admin சேலம் Published: July 2, 2023 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



விஐபிகள் பலரும் பயன்படுத்தும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரில், நேற்று- சனிக்கிழமை இரவு முதல் பதிவுகளை சரியாக பார்க்க முடியவில்லை என்று பயனாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், ட்விட்டர் சேவை முடங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ட்விட்டரில் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள் (Verified accounts) நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக ட்விட்டரை (Unverified ) பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே வாசிக்கலாம். மேலும், புதிதாக ட்விட்டருக்கு நுழைபவர்கள், நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.

ட்விட்டரை பெரும் தொகைக் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் முதலில் வருவாயைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பெற சந்தா செலுத்தும் முறையைக் கொண்டுவந்தார். மேலும், விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஈட்ட ட்விட்டர் பிரபலங்களின் குறிப்பிட்ட பதிவுகளைப் படிக்க கட்டணம் செலுத்தும் முறை பற்றிய அறிவிப்பு இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. மேலும், ட்விட்டர் API பயன்படுத்தப்படுத்தும் டெவலப்பர்களிடம் இருந்து ட்விட்டர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது .

இந்நிலையில் சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள், அதாவது ப்ளூ டிக் பெற்ற பயனாளிகள் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே வாசிக்கலாம். மேலும், புதிதாக டிவிட்டருக்கு நுழைபவர்கள், நாளொன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ட்விட்டரில் கணக்கு இல்லாதபோதும் ட்வீட்களை பார்வையிடும் வசதி இதுவரை இருந்தது. இனி அந்த வசதியும் ட்விட்டரில் இருக்காது. எந்த ஒரு ட்வீட்டைப் பார்க்க வேண்டும் என்றாலும், நீங்கள் ட்விட்டரில் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது ட்விட்டர் கணக்கு தொடங்கவோ அல்லது ஏற்கெனவே உள்ள கணக்கில் லாக் இன் செய்யவோ வேண்டும். இனி, அதற்குப் பின் தான் ட்விட்டரில் பதிவுகளைப் பார்க்க முடியும். நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ட்விட்டர் தரவை கொள்ளை அடிக்கின்றன என்றும் இது ட்விட்டர் பயனர் அனுபவத்தை பாதிக்கிறது என்றும் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு காரணமாக எலான் மஸ்க் , “நாம் அனைவரும் ட்விட்டருக்கு அடிமையாகி இருக்கிறோம். அதிக நேரம் ட்விட்டரைப் பயன்படுத்துகிறோம். இதைக் கட்டுப்படுத்தவே இந்தப் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நான் இந்த உலகத்திற்கு நல்லதைத்தான் செய்திருக்கிறேன். இனி நீங்கள் ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழித்து போனை/ட்விட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களை இனி பார்க்க ஆரம்பியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்

எலான் மஸ்கின் இந்த அறிவிப்புக்கு பலரும் அதிருப்தியை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்