Skip to content
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
  • About Us
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
    • Privacy Policy
    • Terms and Conditions
  • Contact Us
  • Home
  • உலகம்
  • ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்!

ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்!

  • admin
  • July 24, 2023
  • Exclusive, Slider, உலகம், டெக்னாலஜி
ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்!
0
SHARES
ShareTweet

உலக அளவில் பிரபல சோசியல் மீடியா பிளாட்பார்மான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இதனை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார் மஸ்க்.

கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார். இந்தச் சூழலில் ட்விட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார். அது குறித்து ட்வீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.

வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

ட்விட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது

0
SHARES
ShareTweet

changedElon MusklogonameTwitterX!X.com

Post navigation

Prev
Next

Related Posts

ஏற்றுமதி வர்த்தகம்:வங்கியைக் கைவிட்டு டிஜிட்டலுக்கு மாறும் இந்தியா!
  • Exclusive
  • வணிகம்

ஏற்றுமதி வர்த்தகம்:வங்கியைக் கைவிட்டு டிஜிட்டலுக்கு மாறும் இந்தியா!

  • admin
  • April 28, 2026
வாட்ஸ்அப்புக்கு சவால் விடுகிறாரா மஸ்க்? எக்ஸ் சாட் (X Chat) – ஒரு அதிரடி அலசல்!
  • Exclusive
  • டெக்னாலஜி

வாட்ஸ்அப்புக்கு சவால் விடுகிறாரா மஸ்க்? எக்ஸ் சாட் (X Chat) – ஒரு அதிரடி அலசல்!

  • admin
  • April 28, 2026
யுத்தமும் இந்தியப் பொருளாதார நிதர்சனமும்!
  • Exclusive
  • அலசல்
  • எடிட்டர் ஏரியா

யுத்தமும் இந்தியப் பொருளாதார நிதர்சனமும்!

  • admin
  • April 28, 2026
ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு:சர்வதேச தொழிலாளர் நினைவு தினம்!
  • Exclusive
  • மறக்க முடியுமா

ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு:சர்வதேச தொழிலாளர் நினைவு தினம்!

  • admin
  • April 28, 2026
கடல்வாழ் பாலூட்டிகள் மீட்பு தினம்: கடலின் காவலர்களைப் போற்றுவோம்!
  • Exclusive
  • மறக்க முடியுமா

கடல்வாழ் பாலூட்டிகள் மீட்பு தினம்: கடலின் காவலர்களைப் போற்றுவோம்!

  • admin
  • April 27, 2026
உலக வடிவமைப்பு தினம்: மாற்றத்தை உருவாக்கும் படைப்பாற்றல்!
  • Exclusive
  • மறக்க முடியுமா

உலக வடிவமைப்பு தினம்: மாற்றத்தை உருவாக்கும் படைப்பாற்றல்!

  • admin
  • April 27, 2026

Follow Me

  • facebook
  • twitter
  • instagram
  • youtube

Aanthaireporter.in

Add AanthaiReporter.Com | Tamil Multimedia News Web to your Homescreen!

Add