பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு!

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு!

பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இம்மானுவேல் மெக்ரான் 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அந்நாட்டு அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இடத்தில் புதிதாக எலிசபெத் பார்ன் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 61 வயதாகும் இவர், , அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றுள்ளார். இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சரவையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினர். இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் ராஜினாமா செய்வார் என பலரும் எதிா்பாா்த்து இருந்தனர். அதன்படியே ஜீன் காஸ்டெக்ஸ் திங்கட்கிழமை(நேற்று) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஜீன் காஸ்டெக்ஸ் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் பான் அவர்களை அதிபர் மேக்ரான் நேற்று அதிரடியாக நியமித்துள்ளாா். இந்த மூலம் இனி வரும் காலத்தில் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் எலிசபெத் இருவரும் இணைந்து முழுமையான அமைச்சரவையை அமைப்பார்கள் என அரசியல் வட்டாரத்தில் எதிா்பாா்க்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீர்திருத்த நடவடிக்கைகளின் தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரி களிடமிருந்து விமா்சனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை தவிர்க்க முயற்சிகள் எடுப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது

error: Content is protected !!