எலக்ட்ரிக் வாகனங்களும், மறைந்திருக்கும் ஆபத்துகளும்! -ஒரு விழிப்புணர்வு பதிவு!
தற்போதைய நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகம் அருகாமையில் உள்ள பயன்பட்டிற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு காரணம் இன்னும் நம்மிடம் நல்ல தொழில் நுட்பமும், நீண்ட தூரம் செல்லும் அளவுக்கு ஸ்டோரேஜும், ரீசார்ஜ் நிலையங்களும் இல்லாதது மட்டுமல்ல, அங்கே நீண்ட தூர தொடர் பயன்பாட்டில், விபத்துகளுக்கான வாய்ப்புகளும் மிக அதிகம் என்பதால்தான்.
ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் நமது அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அதன் தொழில் நுட்பம் வளரவில்லை. அதன் உபயோகம் அதிகரிக்கும்போது அனுபவங்களும், ஆராய்ச்சிகளும் மேம்படும். அதன் விளைவாக நாளடைவில் நம் தேவைகள் பூர்த்தியாகும். அது வரை நாம் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இன்றைய நிலையில் TESLA இந்த வகை ஆராய்ச்சியில் முண்ணனியில் முன்னேறி உள்ளது.
முதல் பிரச்சினை தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள். ஒரு பேட்டரி 🔋 சார்ஜ் செய்யும்போது மட்டுமல்ல, டிஸ்சார்ஜ் ஆகும்போதும் சூடாகும். அதுவும் கடைசி 20% டிஸ்சார்ஜ் என்பது கூடுதல் சூட்டை உணர முடியும். இதை நீங்கள் உங்கள் மொபைல் போனிலேயே Low Battery Warning வந்தபின் பயன் படுத்தினால் அதிகம் சூடாவதை உணர் முடியும். எனவே கடைசிவரை பயன்படுதாமல் முன்னரே சார்ஜ் செய்வது ஆபத்தை குறைப்பது மட்டுமல்ல, உங்கள் பேட்டரியின் வாழ் நாளையும் அதிகரிக்கும்.
நீண்ட தூரம் பயணித்து சூடாக இருக்கும் பேட்டரியில் உடனே ஜார்ஜ் செய்தால் பேட்டரி விரைவில் சூடாகும். சார்ஜ் செய்தவுடன் நாம் மீண்டும் பயணத்தை தொடரும் அது போன்ற சூழ்நிலையில் தீ பிடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அடுத்ததாக நெடுஞ்சாலைகளில் உள்ள Fast Charging Stations இல் சார்ஜ் செய்யும்போது மேலும் அதிகமாக வெப்பமாதல் தவிர்க்க முடியாது.
இதை தவிர்க்க, சிறிது நேரம் கொடுத்து பேட்டரியின் சூடு குறைய அனுமதித்து, பயன்படுத்துவது அத்ற்கான வாய்ப்பினை குறைக்கும்.
இது போன்றதொரு சூழல் லோக்லில் பயன்படுத்தும்போது வாய்ப்புகள் குறைவு.
ஹெவியாக லோட் கொடுக்கும்போது டிஸ்சார்ஜ் வேகமாகி அதன் வெப்பமாகும் வாய்ப்புகளும் மிக அதிகம். அதாவது உங்கள் பேட்டரி அதிக எடையை ஏற்றிய வாகனத்தில், அதிக பட்ச வேகம் செல்ல முயன்றால், அங்கே சூடாவது மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக உங்கள் வாகனம் 60 கிமீ வேகம் வரை செல்லும் என்றால், 30-40 வேகத்தில் சென்றால் அது குறைவான வெப்பத்தை உமிழும், ஆபத்தை குறைப்பது மட்டுமல்ல, சீரானா டிஸ்சார்ஜ் மூலம் பேட்டரியின் வாழ் நாளையும் அதிகரிக்கும்.
அது போன்ற சூடாக இருக்கும் பேட்டரிகளை கடுமையான வெய்யில் நிறுத்துவதை தவிர்க்கலாம். எளிதில் தீப்பிடிக்கும் பொருளின் அருகில் வைப்பதை தவிர்க்கலாம்.
தேவையற்ற வாகனத்தில் உள்ள பொருட்களை குறைக்கலாம்.
அது மட்டுமல்ல பாட்டரிகளின் தரம் இன்னும் உயர வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடக்கிறது. அதுவரை ஜாக்கிரதையாக பய்ன்படுத்தி ஆபத்தை தவிர்க்கக விழிப்போடு இருக்கவும்.
அதுமட்டுமல்ல, ஆட்டோ கட்டாஃப் இருந்தாலும் தொடந்து பேட்டரியை சார்ஜ் செய்வது தவறு. ஏனெனில், 12 வோல்ட் பேட்டரியில் ஃப்ளோட்டின் சார்ஜ் 13 வோல்ல்ட்டுக்கு மேலே செல்லும். அதன் பின்னதே ஆட்டோ கட்டாஃப் வேலை செய்ய்ய்ம். அது சில நிமிடங்களில் அந்த ஃப்ளோட்டிங் பாய்ண்ட் செட்டில் ஆகி 12 வோல்ட் காட்டும்போது மீண்டும் சார்ஜ் ஆகும். எனவே, ஆட்டோ கட்டாஃப் என்பது இன்னும் முழுதான தீர்வு அல்ல என்பதால், தொடர்ந்து சார்ஜ் செய்தால் மினுழப்பும், பாட்டரியின் லைஃபும் குறையும்.
பொதுவாக ஒரு பேட்டரியுன் ஆயுட்காலம் 3-5 வருடங்கள் என்பார்கள், ஆனால் 12 வருடங்கள் ஆகியும் அதன் தரம் குறையாமல் பாட்டரிகளை பயன்படுத்தி கொண்டிருக்கும் அனுபவங்களை அண்ணா பகிர்ந்தபோது, உந்த பாதுகாப்பு பற்றியும் பகிர்ந்தார்கள். அதை உங்களிடம் பகிர்கிறேன்! நீங்களும் பகிருங்கள், இது ஒரு சேமிப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்பும் கூட!
நன்றி அண்ணா Chinnaswamy R
மரு. தெர்ய்வசிகாமணி