கர்ம வீரர், படிக்காத மேதை காமராஜர் நினைவாக கல்வி வளர்ச்சி நாள்- ஏன் தெரியுமா?

கர்ம வீரர், படிக்காத மேதை காமராஜர் நினைவாக கல்வி வளர்ச்சி நாள்- ஏன் தெரியுமா?

த்து, பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரசின் தலைவராக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராய், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராய், ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராய்ப் பதவி வகித்தவர். அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்தவர். இந்தியப் பிரதமர்களை இரண்டு முறை உருவாக்கியவர். இரண்டு முறை தேடி வந்த இந்தியப் பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர்… போற்றப் பெருமைகளுக்கு உரியவர் கர்மவீரர் காமராஜர். இவர் கண்மூடிய பிறகு, பணி வாழ்வில் அவருக்கென்று மிஞ்சியது வெறும் அறுபது ரூபாய், பத்துக் கதர் வேட்டி உடைகளுமே.. “காமராஜர் கண்மூடினார். அவர் பயன்படுத்திய வாகனத்தைக் கூட எடுத்துக்கொண்டது, அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார்; அவருடைய உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது; அவரது பெயரை வரலாறு எடுத்துக்கொண்டது’ என தமிழருவி மணியன் கூறியது முற்றிலும் உண்மையே.

“வறுமைப் பரவலாம், சரித்திரம் அரும் பெரும் இடம் கொடுக்கக் காரணம் என்ன? அவர் தேசத்தின் தங்கம்! கல்விக்காக… ஏழை மாணவர்களுக்காக… இலவசக் கல்வித் திட்டத்திற்காக… மதிய உணவு வழங்கும் திட்டத்திற்காக வரலாறு அவரை மறக்காது. ஏனோ மனித மனங்கள் மறந்துவிட்டன?” “‘கடைமைக்கும் கடமைத்தேற்றம்’ என்ற ரஸ்கின் கூற்றைப்போல, அடித்தட்டு நிலையில் பொருளாதாரமின்மையால் வாடும் ஏழை-எளியோருக்குக் கல்வி என்றும், அனைவருக்கும் இலவசக் கல்வி என்றும், துரியக் கதிர்களை இந்த இருண்ட சமூகத்தினிலேயுமாய்க்கி, அறியாமை இருளகற்றி விடிவழியைத் தந்தவர், எதிர்கால வளமான இந்தியாவைக் காண, அண்ணே மாணவர் விழிகளில் அறிவொளியைத் தந்தவர் காமராஜர்.””படிக்க ஒரு சாதியும், படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு சாதியும் எனக் கல்வி ‘சாதிய விலங்குகளுக்குள்’ பூட்டப்பட்டுக் கிடந்தபோது, தந்தை பெரியாரின் கொள்கையை அடியொற்றி ஊர்கள்தோறும், கிராமங்கள்தோறும் கல்விப் பாடசாலைகளை அமைத்தவர் காமராஜர். நிலை குலைந்த தமிழ்மக்களைக் கட்டி யெழுப்பி, உணர்ச்சியூட்டி, அவர்களுக்குத் தன்மான உணர்வும் ஊட்டியவர் இவர். தமிழ் மக்களைப் படித்தவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் உருவாகிய பெருமை இவரையே சேரும்.

சுருக்கமாகச் சொன்னால், தந்தை பெரியாரின் பிரச்சாரத்தைச் சட்ட வடிவமாக்கியவர் காமராஜர்.. அந்த ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்க: கொண்ட காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றால் காமராஜரின் புகழ் எத்தகைய சிறப்புக்குரியது என்று புரிந்து கொள்ள முடியும். ஆம்.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 அன்று, முன்னாள் முதலமைச்சர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் “கல்வி வளர்ச்சி நாள்” அல்லது “கல்வி தினம்” என அறிவிக்கப்பட்ட இந்நாள், காமராஜரின் கல்வித்துறை பங்களிப்புகளைப் போற்றும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்புக் கொண்டாட்டங்களுடன் அனுசரிக்கப்படுகிறது.

காமராஜரின் கல்விப் பங்களிப்பு

காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில், கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காகப் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது கல்விச் சீர்திருத்தங்கள், தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தன. அதாவதுகாமராஜரின் ஆட்சிக் காலத்தின்; போது சென்னை மாகாணத்தின் பொதுக் கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்றிருந்த நெ.து.சுந்தரவடிவேலு என்பவரை அழைத்தார். ‘குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தால் போதாது. எல்லோரும் பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டும். வருமானம், ஜாதி போன்ற பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அதற்காக போதுமான பள்ளிகளை திறக்க வேண்டும். தொடக்கக்கல்வி கற்க வரும் எந்த குழந்தையும் ஒரு மைல் தொலைவுக்கு மேல் நடக்கக்கூடாது. அதற்கு ஏற்ப பள்ளிகளை திறக்க வேண்டும். அதேபோல நடுநிலைப்பள்ளிகள் மூன்று மைல் தூரத்துக்கு ஒன்று என்ற விதத்திலும் இரண்டு உயர்நிலை பள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் 5 மைல் என்ற அளவிலும் இருக்க வேண்டும். இதை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக திட்டங்களை வகுத்துச் சொல்லுங்கள்’ என்றார்.

‘இத்திட்டத்தை செயல்படுத்த போதுமான நிதி இருக்குமா?’ என்று சுந்தரவடிவேலு கேட்டபோது, ‘அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் காமராஜர். திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளோடு புதிதாக 14,000 பள்ளிகள் கட்டி முடிக்கப்பட்டன. காமராஜர் பதவியேற்பதற்கு முன் 16,000 தொடக்கப்பள்ளிகள் இருந்தன. பதவியேற்ற பின் அதன் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்தது. 300 மக்கள் வாழும் ஊரில் தொடக்கப்பள்ளி, 2000 மக்கள் வாழும் ஊரில் நடுநிலைப்பள்ளி, 5000 மக்கள் வாழும் சிறிய நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டமிட்டு பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. முதல் திட்ட முடிவில் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 21,500 ஆக உயர்ந்தது. இரண்டாவது திட்ட காலத்தில் இது 26 ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது. அதன் பின் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியது . தொடக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவர் தொகை முதல் திட்டக் காலத்தில் 25 லட்சமாக உயர்ந்தது. இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 இலட்சமாக இருந்தது. பின்னர் 46.1 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்றாவது திட்ட காலத்தில் மேலும் 14 லட்சம் சிறுவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற அளவுகோலும் நிர்ணயிக்கப்பட்டது.

பல முக்கிய தலைவர்களின் மாநிலங்களிலுள்ள கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்ற நிலை இருந்த சமயத்தில் பள்ளிக்கூடமே இல்லாத கிராமம் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் பெருமிதத்துடன் அறிக்கை வெளியிடும் நிலையில் தமிழ்நாடு திகழ்ந்தது என்றால் அது காமராஜரின் சிந்தனையால் உருவானது எனலாம்.காமராஜரின் இம்முயற்சிகள், “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்குவதற்கு வழிவகுத்தன. அவரது கல்விப் பணிகளைப் போற்றும் விதமாக, 1976ல் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு, 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் காமராஜரின் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது. காரணம் என்னவென்றால்   காமராஜரின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஆரம்பக்கல்வி முதல் ஐஐடி வரை நிகழ்ந்த அபாரமான கல்வி வளர்ச்சிதான்

# 1957 இல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962 இல் 29,000 பள்ளிகளாக உயர்ந்தன.

19 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 36 லட்சமாக உயர்ந்தது. 1961இல் இது40 லட்சமானது.

உயர்நிலைப் பள்ளியைப் பொருத்தவரை 1951இல் 637ஆக இருந்தது, 1955இல் 814 ஆகவும், 1962இல் 995 ஆகவும் உயர்ந்தது.

பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1952-ல் 3,33,000 ஆக இருந்தது. 1962-ல் 9,00,000 ஆனது.

1951-ல் ஆண்களுக்கு 27ஆகவும் பெண்களுக்கு 9 ஆகவும் இருந்த கலைக் கல்லூரிகள், 1956இல் 36 மற்றும் 15 ஆகவும், 1963இல் 44 மற்றும் 16ஆகவும் உயர்ந்தது.

1956-ல் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் தலா ஐந்து மட்டுமே இருந்தன. காமராஜர் ஆட்சி காலத்தில் பொறியியல் கல்லூரிகள் 10 ஆக உயர்ந்தது.

காமராஜரின் தீவிர முயற்சியால் 1959-ல் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (I.I.T.) தொடங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. சுமார் 15,000 மாணவர்களுக்கு மேல் தொழில் தொடர்பான கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது.

பள்ளிகளில் கொண்டாட்டம்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக:

  • மேட்டுப்பாளையம்: நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
  • பொள்ளாச்சி: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
  • உடுமலை: ஆரண்யா அறக்கட்டளை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • மதுரை: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமையில் விழா நடைபெற்றது.

தேசிய கல்வி நாளுடனான வேறுபாடு

கல்வி வளர்ச்சி நாள் (ஜூலை 15) தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. இது காமராஜரின் கல்விப் பங்களிப்பை மையமாகக் கொண்டது. ஆனால், தேசிய கல்வி நாள் நவம்பர் 11 அன்று இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது 2008 முதல் அனுசரிக்கப்படுகிறது.

காமராஜரின் மற்ற சாதனைகள்

கல்வியைத் தவிர, காமராஜர் பல துறைகளில் முக்கியப் பங்களிப்புகளை ஆற்றியவர்:

  • தொழில்மயமாக்கல்: மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்தினார்.
  • விவசாய மேம்பாடு: நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.
  • சமூக நீதி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கியோருக்குச் சமூக நீதியை உறுதி செய்தார்.

மொத்தத்தில் கல்வி வளர்ச்சி நாள், காமராஜரின் கல்விச் சீர்திருத்தங்களை நினைவுகூருவதோடு, மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், மாணவர்களிடையே காமராஜரின் பங்களிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கல்வியின் மீதான ஆர்வத்தையும் தூண்டுகின்றன. “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது” என்ற பாரதியின் வரிகளை உண்மையாக்கிய காமராஜரின் புகழ், இந்நாள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts