நேபாளத்தில் நில நடுக்கம்..! 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிர்வில் 138 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நில நடுக்கம்..! 6.4 ரிக்டர் அளவில்  ஏற்பட்ட அதிர்வில் 138 பேர் உயிரிழப்பு!

நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (அந்நாட்டு நேரப்படி) 11.47 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியானது. இந்த நிலநடுக்க ரிக்டர் அளவானது 6.4 என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் கூறுகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. அதே வேளையில், ஜெர்மன் நில அதிர்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலில் படி 5.6 எனவும் நேபாள நிலநடுக்க அளவு பதிவாகி இருந்தது.இதன் காரணமாக வீடுகள் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.

பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 10 மணி நிலவரப்படி 138 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தற்போதைக்கு உயிர், பொருள் சேதம் குறித்த தகவல் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் உணரப்பட்டது.இந் நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாளம் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ராணுவ ஹெலிகாப்டரில் மூலம் பார்வையிட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!