ஹாட் டாபிக்கான டைவோர்ஸ் போட்டோ ஷூட்!
விவாகரத்து.. -இதை normalise பண்றமோ இல்லியோ.. குறைந்த பட்சம் நியாயமான காரணங்களுக்காக பிரியும் போது அதை எதிர்க்காம இருக்கலாம்.. ஏன் விவாகரத்து நடக்குது.. அது ஒரு கடைசிப் புள்ளி.. யாரும் எடுத்த முதல் வார்த்தையே விவாகரத்துனு ஆரம்பிக்க மாட்டாங்க…!

ஆண் .. பெண்.. இரு தரப்பிலும்.. குடி.. சூதாட்டம்.. ஊதாரித்தனம்.. நோய்மை.. உடல் ஆரோக்கியம் இன்மை.. குடும்பத்தை கவனியாமை… சோம்பேறித்தனம்… இது போல் உடல் சார்ந்த.. சமூகம் சார்ந்த நிறைய குறைபாடுகள் உண்டு.. எந்த அளவுக்கு அந்தக்குறைபாடுகள் அடுத்த மனிதனை குறைவாக பாதிக்கிறதோ.. அந்த அளவு அந்த உறவின் நிலைத்தன்மை நீடிக்கும்…!கூடவே.. தனி மனித ஒழுக்கம்.. சக மனிதனுக்கான மரியாதை.. பரஸ்பர அன்பு.. இதுவும் முக்கியம்… எதுவுமே சரியில்லாமலோ.. அதிக பட்சங்கள் சரியில்லாமலோ போகும் போது அந்த உறவின் நிலைத்தன்மை நீடிக்காது.. அவர்களுக்கு இந்த விவாகரத்து நல்ல தீர்வு…!விவாகரத்தைப் பொறுத்த வரை ஆண்கள்.. பெண்கள் இருபாலரும் பாதிக்கப்பட்டாலும்.. பெண்தரப்பின் சதவீதம் அதிகம்.. நான் கண்ட விவாகரத்தான பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளின் வீரியம் ஆணைவிட அதிகம்.. முக்கிய காரணம் குழந்தை வளர்ப்பு… இதை எத்தனை ஆண்கள் விவாகரத்துக்குப்பிறகு பொறுப்பெடுத்து தன் குழந்தையை பாத்துக்கறாங்க.. அதுக்கான பொருளாதாரச் சமநிலையைப் தராங்க.. சில பேர் இருக்கலாம்.. அதெல்லாம் விதிவிலக்கு..
பெரும்பான்மை ஆண்கள் விவாகரத்திற்கு பிறகு தனக்கான புதுவாழ்க்கைத் தேடலை உடனே ஆரம்பிச்சிடறாங்க.. தான் விவாகரத்து செய்த மனைவிக்கோ.. குழந்தைக்கோ செய்ய வேண்டியதை செஞ்சுட்டுதான் இருக்காங்களான்றதுக்கான பதிலை நீங்களே தேடுங்க.. விவாகரத்துங்கறது கண்டிப்பா கொண்டாட்ட மனநிலை கிடையாது.. அதுக்கப்பறமா அவர்களுக்கான கூடுதல் அழுத்தங்களைத்தான் இந்த சமூகம் தரும்.. அதை யாராவது கொண்டாடறாங்கன்னா நிச்சயமா அது ஒரு விடுதலையாத்தான் இருக்கும்… நிறைய பெண்கள்.. ப்ரேக்கப்பிற்கு பிறகு.. விவாகரத்திற்குப் பிறகு எதோ ஒன்னை தன் வாழ்க்கையில் கண்டடையறாங்க..
இப்போ நடந்த போட்டோ ஷூட்ல உள்ள பெண்.. தனக்கு நடந்தவைகளைச் சொல்லும் போது.. என்னடா இது எங்க தாத்தன் காலத்துலயும் இந்தக்கருமம்தான்.. எங்கப்பன் காலத்துலயும் இதே கருமந்தான்… எதோ.. நம்ம காலத்துல பொழப்பு பரவால்லனு நினைச்சா அதேதான் தொடருது… இந்த பெண்ணை மட்டும் வச்சு சொல்லல நான்… எத்தனை எத்தனை பெண்கள் இன்னும் அடி உதை வாங்கிட்டு.. குழந்தைக்காக.. சமூகத்துக்காகனு சகிச்சுட்டு வாழ்ந்துட்டு தான் இருக்காங்க.. எதையும் மறுக்க முடியாது..

நல்ல சொகுசான குடும்ப வாழ்க்கையில் இருந்துகிட்டு.. ஒரளவு பொருளாதாரத்துலயும் தன் நிறைவு உள்ளவர்கள் தான் .. ஏ இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. இதுக்கெல்லாம் விவாகரத்தா.. அட்ஜஸ்ட் பண்ணியிரு… சந்தோஷமால்லாம் கொண்டாடாதே.. சா..வு.. அதான் சரிங்கறது போல எழுதறிங்க…
அந்த ஆளை அவளை abuse பண்ணினதா அந்த பொண்ணு சொன்ன அத்தனையும் காத்துல பறக்க விட்டுட்டு… போட்டோவை மிதிக்கிறா.. கிழிக்கிறா.. சந்தோஷமா இருக்கா.. ஏ.. என்ன பொண்ணு நீ… பிரிஞ்சு போனா அப்படியே போயிரனும்… அவனை நீ insult பண்ணக்கூடாது.. decent ah behave பண்ணுனு… இன்னும் அந்தப் பொண்ணுக்குத்தான் அறிவுரைக்கூந்தல்…
டீசன்டா பிரியறதெல்லாம்.. மியூச்சுவல் understanding… Abuseக்கு கிடையாது…
யாரு.. எப்ப.. சிக்குவாங்க.. பொளக்கலாம்னு வச்ச கண்ணு வாங்காம பாக்கற இந்த fb கூட்டம் decent பத்தில்லாம் பேசுது..
புள்ளைகுட்டியை படிக்க வைப்போம்.. வாங்க..!
நிலா பாரதி


