டிஸ்னி பிக்சாரின் அடுத்த கனவு: “எலியோ” ஜூன் 20, 2025 இல் ரிலீஸ்!

“இன்சைட் அவுட் 2” பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றொரு பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படமான “எலியோ“வை வெளியிட தயாராகி வருகின்றன. இந்த விண்மீன் அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
“இன்க்ரெடிபிள்ஸ்,” “டாய் ஸ்டோரி,” “ஃபைண்டிங் நீமோ,” “இன்சைட் அவுட்” போன்ற பல மனதை மயக்கும் திரைப்படங்களை வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது ரசிகர்களை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் சென்று ஒரு புதிய அனுபவத்தைத் தர காத்திருக்கிறது.
“எலியோ” திரைப்படம் ஒரு சிறுவனைப் பற்றிய கதை. விண்வெளியைப் பற்றிய ஆசையுடன் வாழும் எலியோ, எதிர்பாராத விதமாக அண்டங்கள் முழுவதும் பயணம் செய்யும் ஒரு புதிய அவதாரத்தை எடுக்கிறான். அங்கு அவன் பூமியின் தூதராகப் பரிசீலிக்கப்படுகிறான்! தனது பயணத்தில், எலியோ பல விசித்திரமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தையே பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலைச் சந்திக்கிறான். இந்த சாகசப் பயணத்தில், தனக்கான உண்மையான இடத்தைக் கண்டறிந்து, உண்மையிலேயே யார் என்பதை உணர்வதுதான் கதையின் மையமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தை இயக்கியவர்கள்:
- மடலின் ஷரஃபியன் (Burrow)
- டோமீ ஷீ (Turning Red, Bao)
- ஏட்ரியன் மோலினா (Coco)
வாய்ஸ் காஸ்ட்:
- யோனாஸ் கிப்ரீயாப் – எலியோ
- சோயி சால்தானா – ஆன்ட் ஒல்கா
- ரெமி எட்ஜர்லி – கிளோர்டன்
- பிராட் காரெட் – லார்ட் கிரிகான்
- ஜமீலா ஜமீல் – தூதர் குவெஸ்டா
- ஷர்லி ஹென்டர்சன் – OOOOO
டிஸ்னி பிக்சார் வழங்கும் “எலியோ” – ஜூன் 20, 2025 முதல் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் காணலாம். விண்வெளியின் அற்புதங்களை உங்கள் குடும்பத்துடன் அனுபவிக்க தயாராகுங்கள்!