தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.

தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.

தமிழறிஞரும், தொல்லியல் துறை அறிஞரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று காலமானார். 88 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

ஐராவதம் மகாதேவன் அக்டோபர் 2, 1930இல் திருச்சிராப்பள்ளி அருகில் மண்ணச்சநல்லூரில் பிறந்ந்தார். திருச்சி வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியில் பணி புரிந்த இவர், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராக பொறுப்பு வகித்தார்.

சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) குறித்த ஆய்வில் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். பழங்கால நாணயங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்.1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்தார். இதையொட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். 1970-ஆம் ஆண்டு: புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை அளிக்கப்பட்டு, சிந்து சமவெளி எழுத்துக் களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பதை அறிவித்தார். 2009 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 – 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின்பு, சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்பது அவரது கருத்தாகும். தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் 1987-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் ஆவார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2009-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அன்னார் மறைவுக்கு ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் அஞ்சலி 

 

Related Posts