தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’

தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘வேலையில்லா பட்டதாரி.’ அதில் தனுஷ்-அமலாபால் ஜோடியாக நடித்து இருந்தார்கள். வேல்ராஜ் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தஈ. எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுசின் வொண்டர்பார் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

vip may 10

தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த அமலாபால், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மற்றும் விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தி பட உலகின் பிரபல கதாநாயகியான கஜோல், தனுசுடன் இணைந்து நடிக்கிறார். படத்தின் கதை-வசனத்தை தனுசே எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தை இயக்கிய சவுந்தர்யா டைரக்டு செய்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பை ரஜினிகாந்த் தொடங்கி வைத்த இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஈஆணீஆஈஏஏ “எப்போது ’வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும்” என படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தார்கள். அதன்படி நேற்றிரவு ஜுலை 28-ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜூலை 28-ம் தேதி தனுஷின் பிறந்த நாளாகும், அதனை முன்வைத்து வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts