டோலிவுட்டில் சேகர் கம்முலா இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆகிறார் தனுஷ்!

டோலிவுட்டில் சேகர் கம்முலா இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆகிறார் தனுஷ்!

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர் .தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் .இது குறித்து தனுஷ், நான் வியக்கும் இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் பணியாற்றவிருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுள்ளார்.

டோலிவுட் திரையுலகத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தனது முதல் படமான ‘டாலர் டிரீம்ஸ்’ படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றவர். தொடர்ந்து தெலுங்கில் ‘ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், அவக்காய் பிரியாணி, லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, பிடா’ ஆகிய படங்களை இயக்கியவர். தெலுங்கில் அவர் இயக்கி நயன்தாரா நாயகியாக நடித்த ‘அனாமிகா’ படம் ஒரே சமயத்தில் தமிழிலும் ’நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த டைரக்டர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தனுஷை வைத்து ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிட திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. தனுஷ் தற்போது ‘த கிரே மேன்’ என்ற ஆங்கிலப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும், அண்ணன் செல்வராகவன் இயக்க உள்ள ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்க உள்ள சூழலில் இந்தப் புதிய படத்திலும் நடிக்க உற்சாகமாக தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்

இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

மறைந்த திருமதி .சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார்.இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் .

error: Content is protected !!