32°C
விளம்பரம்
Advertisement

தீபா மலிக் – பராலிம்பிக் சாதனை பெண்மணியின் பிளாஷ் பேக்!

admin சேலம் Published: September 13, 2016 3 நிமிட வாசிப்பு Updated: September 14, 2016 இது லேடீஸ் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ரியோ பராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் Deepa Malik தற்போது 46 வயதான தீபா மலிக்தான் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தானாக்கும்!

deepa sep 13

இந்த சாதனைப் பெண்மணி  தீபா_மலிக் பிளாஷ்பேக்  ரிப்போர்ட்  இதோ:

அரியானா ஸ்டேட்டை சேர்ந்த தீபா மலிக் மிலிட்டரி ஆபீசரோட மனைவி . ரெண்டு குழந்தைகளின் அம்மா. போன 1999ம் ஆண்டு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட உருவான ஒரு கட்டியை அப்ரேசன் செஞ்ச போது, இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல் இழந்து போச்சு. அதை சரி செய்வதற்கு அடுத்தடுத்து 31 ஆப்ரேசன்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதுனாலெ இடுப்புக்கும், தொடைக்கும் இடையே மட்டும் கிட்டத்தட்ட 200 தையல்கள். இத்தினி ஆப்ரேசனுக்குப் பின்னாடியும், அவரால் பழைய நிலைக்குத் திரும்ப முடியவில்லை.

அந்த சிகிச்சையில் இருந்து பூரண குணமடைய மட்டும் 3 வருஷம் பிடித்தன. அதற்கு பின்னாடி வீல்சேரில்தான் தீபாவின் வாழ்க்கை அப்ப்டீன்னு ஆகி போச்சி. இப்படி எதிர்பாராத விதமா உடல் ஊனமானாலும், மனசு உறுதி தளராமல் விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு குண்டு வீசும் தீபா, ஏற்கனவே 2011-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். போன 2012ம் ஆண்டு மத்திய அரசு தீபாவுக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை இவர்தான்.அது மட்டுமில்லாம வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என பல விளையாட்டுப் போட்டிகளிலும் தீபா அசத்துவார். மோட்டார் பைக் பிரியை. இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுபவர்.

கார்பந்தயத்திலும் ஆர்வம் கொண்டவர். ஹிமாலயன் மோட்டார் ரேசில் பங்கேற்றுள்ளார். இந்த பந்தயம்தான் இந்தியாவிலேயே மிகவும் ஆபத்து நிறைந்தது. பாலைவனம் முதல் இமயம் வரை சுமார் 1700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ரிஸ்க் நிறைந்த ஒரு பந்தயம் இது. கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்திலும் கார் ஓட்ட வேண்டியது இருக்கும். இந்த கார் பந்தயத்திலும் தீபா கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.

ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா அமைப்பிடம் இருந்து ஸ்பெஷல் லைசென்ஸ் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனை இவர்தான். இவருக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட கார்களில் தீபா, ரேஸ்களில் பங்கேற்கிறார்.

இதையெல்லாம் விட 2008ம் ஆண்டு யமுனா நதியில் நீரோட்டத்தை எதிர்த்து, ஒரு கிலோ மீட்டர் நீச்சலடித்து சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். அப்படி நான்கு லிம்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

மொத்தத்தில் இந்த தீபா மேடம் நேஷனல் அளவில் 45 தங்கப்பதக்கங்களும் 5 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார். சர்வதேச அளவில் 13 பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும் தீபா வெறும் விளையாட்டு வீராங்கனை மட்டுமல்ல. சிறந்த தொழில்முனைவோரும் கூட. சொந்தமாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். சிறந்த பேச்சாளரும் கூட.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்