32°C
விளம்பரம்
Advertisement

வறுமை குறித்த தரவுகளும், தரவுகளின் வறுமையும்!

admin சேலம் Published: July 31, 2023 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



இது பர்க்கலா பிராபகர் அவர்களின் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. இந்த அரசு வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளைக் குறித்து சேகரிக்கும் தரவுகளை மறைக்கிறது, அல்லது சேகரிப்பதையே நிறுத்தி விட்டது என்கிறார். ஏனெனில் மேடைகளில் பிரதமரும், அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் வளர்ச்சி குறித்து அவிழ்த்து விடும் பொய்களை தரவுகள் அம்பலப் படுத்தி விடும்.

2019இல் இந்திய புள்ளி விவர ஆணையத்திலிருந்து இரண்டு அரசு சாராத வல்லுனர்கள் விலகினர். தொழிலாளர் நிலை குறித்த தரவுகளைச் சரியென்று கூட்டத்தில் ஒப்புக் கொண்ட ஆணையம் அவற்றை வெளியிட மறுத்ததுதான் அவர்களின் ராஜினாமாவுக்குக் காரணம்.

தற்போது மக்கள் தொகை ஆய்வு மையத்தின் இயக்குனர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். தேசிய குடும்பநல கணக்கெடுப்பை (National Family Health Survey) நடத்தும் இந்த அமைப்பின் முடிவுகளை வைத்து பல கொள்கை முடுவுகள் எடுப்பது வழக்கம். இந்த கணக்கெடுப்பின் ஐந்தாவது சுற்றின் முடிவுகளில் அரசுக்குத் திருப்தி இல்லையாம். இதனால் 6ஆவது சுற்றை நடத்தவே வேண்டாம் என்று நினைப்பதாகவும் தகவல்.

இந்த சர்வே ஒன்றின் முடிவுகள்தாம் மக்கள் தொகை வளர்ச்சியின் வேகம் சங்கிகள் கூறும் அளவிற்கு அச்சம் தருவதாக இல்லை என்றும், இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சியின் வேறுபாடுகளும் வெகுவாகக் குறைந்து விட்டன என்றும் காட்டியது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையை விட பெருமளவு அதிகரித்து இந்தியா முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்பது மாபெரும் பொய் என்று தரவுகளும், சமூக அறிவியல் அடிப்படையான ஆய்வுகளும் சொல்கின்றன.

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…. !

விஜயசங்கர் ராமசந்திரன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்