மழை நீரில் ஆடிப்பாடி அந்த நீரை பருகுவது ஆரோக்கியம்!

மழை நீரில் ஆடிப்பாடி அந்த நீரை பருகுவது ஆரோக்கியம்!

ன்றுவரை நாடெங்கும் பெய்து வரும்அடை மழை மட்டுமல்ல; மழை சார்ந்த நோய்களும் வரக்கூடிய காலமிது என்போருமுண்டு.. சித்த மருத்துவத் தத்துவப்படி தட்சிணாயனம் எனும் காலம் (சூரியன் தென் துருவத்தை நோக்கிச் செல்லுதல்), அதாவது ஆடி முதல் மார்கழி வரை, நமது உடலைத் தாக்கும் நோய்களுக்கு ஏற்ற காலமாக அமைகிறது. ஆனால் இப்படி பெய்யும் .மழை நீரில் நனையும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் , அதாவது மழை மனிதனுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். ஆம்..மழை நீரா… அய்யய்யோ ஜலதோசம் பிடிச்சுக் குமே?’ என்று நீங்கள் பதறுவது காலம், தூரம் கடந்து எனக்குக் கேட்கிறது. மழையின் ஜலம் எப்படி தோசம் ஆகும்? மழைநீர் ஆபத்து என்று, வணிக விளம்பரங்கள் நமது தலையில் தவறான பாடத்தைப் புகட்டியுள்ளன.

மழைநீரை அமிழ்தம் என்கிறான் நமது வள்ளுவப் பாட்டன். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது தமிழின் உயிர்ப்பானப் பழமொழி. இந்தப் பூமியின் உயிரே நீர்தான். நீரிலிருந்துதான் உயிரின் தோற்றம் தொடங்கியது என்ற அறிவியல் நாம் அறியாததல்ல.

ஆனால் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட இன்றைய வாழ்க்கை முறை மழையை, மழைநீரை அசூயையுடன் பார்க்கப் பழக்குகிறது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் மழை பெய்தால் ‘இந்தச் சனியன் பிடிச்ச மழைக்கு நேரங்காலம் கிடையாது’ என்று சலித்துக்கொள்கிறோம்.

காலையில் பெய்யக் கூடாது. மதியம் எங்காவது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்போது பெய்யக் கூடாது. மாலையில் வீடு திரும்பும்போது பெய்யக் கூடாது. அப்புறம் எப்போது பெய்யலாம்? போனால் போகிறது, நாம் தூங்கும்போது பின்னிரவில் பெய்துவிட்டு காலைக்குள் தன் வேலையை முடித்துக் கொள்ளட்டும் மழை! என்றெல்லாம் நினைப்போர் அதிகம்.

இயற்கையிலிருந்து விலகிய வாழ்முறையால் இந்த மனப்பாங்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழை என்ன ராப்பிச்சையா அல்லது அர்த்த ஜாமத் திருடனா…? இரவோடு இரவாக மூன்றாம் பேருக்குத் தெரியாமல் வந்துவிட்டுப் போக…?

சிலப்பதிகாரம், முதல் வரியில் கடவுளைப் பாடவில்லை. திங்களைப் போற்றி, அடுத்து ஞாயிறைப் போற்றி, மூன்றாவது பத்தியில் ‘மாமழை போற்றுதும்’ என்கிறது. ‘கருணை சுரக்கும் நீர்’ என்கிறது. மழையைச் சனியன் என்று திட்டுகிற சமூகம், நீருக்கு அண்டை அயலாரிடம் கையேந்தியே உலர்ந்து போகும்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும்கழிவுப் பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

மேஎலும் இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். எனவே இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.

ஆக குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. அதுவும் உடல் நடுங்கும்வரை மழைநீரில் குளிக்கலாம். நடுக்கத்தை மீறிக் குளிக்கும்போதுதான் குளிர்க் காய்ச்சல் தோன்ற வாய்ப்பாகும். அதற்காக மழைநீர் நல்லது என்று குழந்தையின் விருப்பத்தை மீறியும் மழைநீர் ஊற்றக் கூடாது. ஏனென்றால் குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு உடலில் போதிய வெப்ப ஆற்றல் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் மழைநீரில் குளித்தால் கண்டிப்பாக எதிர்விளைவை உருவாக்கும்.

மழைநீரில் குளிக்க விரும்பும் குழந்தைகளுடன் பெரியவர்களும் குளிக்கலாம். குளித்து முடித்தவுடன் தோல் வழக்கத்துக்கு மாறான புத்துணர்வு பெறுவதையும், கண்களில் ஒளி பெருகுவதையும் நம்மால் உணர முடியும். குறிப்பாக மழைநீரில் குளிக்கும் போது தோலில் தோன்றும் பளபளப்பு இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிக்கும். காரணம் மழைநீர் தோலுக்குப் பலன் தருவதோடு உள்ளுறுப்புகளின் இயக்கத்தையும் செம்மைப்படுத்துகிறது. வறண்ட தோல் உடையவர்களுக்கு மழைநீர் வரப் பிரசாதம்.

எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

வாழ்வோம் ஆரோக்கியமாக.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்கியத்தை உருவாக்குவோம்.!

வாத்தி அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!