ஸ்ஷ்ப்பா.. என்னா வெயில்.. ஒரு வெள்ளிரிக்காய் ஜூஸ் சாப்பிடுவோமா?

ஸ்ஷ்ப்பா.. என்னா வெயில்.. ஒரு வெள்ளிரிக்காய் ஜூஸ் சாப்பிடுவோமா?

முன்னரே சொன்னது போல் வெயிலும், வெக்கையும் போட்டுத் தாக்க தொடங்கி விட்டது. ஆனால் இந்த வெயில் காலத்தில் கூட வெளியே போய் சில பல பணிகளை செய்ய வேண்டிய கடமை ஆண், பெண் மற்றும் சிறார் என அனைத்து தரப்பினருக்குமுண்டு. இப்படி சுட்டெரிக்கும் சூரியனுடன் அளவளாவி வருவதால் நமக்கு அதீத தாக மட்டுமின்றி, கண் எரிச்சல், சருமம் கருப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வகையில் நம் மேணி அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுக்காக்க எளிதாக மிக மலிவாகக் கிடைக்கும் காய்தன் வெள்ளரிதான்….!

இந்த வெள்ளரியால் உடல் வெப்பத்தைத் தணிப்பது மட்டுமின்றி வேறென்ன பலன் இருக்கு?என்று பலருக்கும் தெரியாது. . வெள்ளரியில் கலோரிகள் குறைவு. பொதுவாக, மலச் சிக்கலுக்கு வாழைப்பழம் சாப்பிடுவோம். அதுக்குப் பதிலாக, இந்தக் கோடைக் காத்தில் தினம் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சிறுநீர் கழிப்பதில் சிலருக்கு பிரச்னை இருக்கும். வெள்ளரியைச் சாப்பிடும்போது, உடலில் நீர் பெருகி, சிறுநீர் பிரிவைத் தூண்டும். சிறுநீரகத்தில் கல் சேர்வதும் தடுக்கப்படும் .நுரையீரலில் படியும் புகையை நீக்கும் ஆற்றலும் வெள்ளரிக்காய்க்கு இருக்கு. நகரத்தின் வாகனப் புகை, தூசிகளைச் சுவாசிக்கிறவங்க, வெள்ளரியைத் தொடர்ந்து சாப்பிட்டு, நுரையீரலை சுத்தமா வெச்சுக்கலாம். இது மட்டுமில்லாமல் ரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்க, பொட்டாசியச் சத்து அவசியம். அது, வெள்ளரியில் அதிகம் இருக்கிறது. அதனால், சீரான ரத்த உற்பத்திக்கும் வெள்ளரிக்காய் பயன்படுகிறது. வெள்ளரிக்காய்ச் சாறும் குடிக்கலாம். வயிற்றுப் புண், கல்லீரல் மற்றும் நுரையீரல் சூட்டைத் தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.

ஆக இந்த வெயில் தாக்கத்திலிருந்து நம்மைக் காக்க வெள்ளரிக்காய் ஜூஸ் செய்முறை குறித்துகொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வோமா? . .

முதலில் தரமான, விளைந்த வெள்ளரிக்காயை தேர்ந்தெடுத்து அதன் இருமுனைகளிலும் வெட்டி சிறிது நேரம் நீர் வடிய வைக்கவும். அபூர்வமாக சில வெள்ளரி கசக்கும். இந்த நீர் வடிய விட்டால், ஓரளவு கசப்பு சுவை குறைந்து இருக்கும். இல்லையெனில் ஒரு சிறு துண்டு வெள்ளரியை சுவைத்து பார்க்கவும்.

அந்த சிறு துண்டுகளாக நறுக்கி ஜூஸரில் அல்லது மிக்ஸியில் அரைத்து வடி கட்டுங்கள்.

சுவை கூட்டும் வகையில் இந்துப்பு எனப்படும் ப்ளாக் சால்ட் சேர்த்து பருகலாம்.

error: Content is protected !!