கோவிட் தொற்றை வீட்டிலேயே கண்டறிய உதவும் கருவி: வீடியோவுடன் முழு விபரம்!

கோவிட் தொற்றை வீட்டிலேயே கண்டறிய உதவும் கருவி: வீடியோவுடன் முழு விபரம்!

ம் நாட்டை இன்று வரை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வட மாநிலங்கள் குறைந்தாலும், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். மேலும், காரனோவை எதிர்கொள்வதற்கு பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியம் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கோவிட் தொற்றை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் கோவி செல்ஃப் (CovieSelf) என்றழைக்கப்படும் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ஆர்.ஏ.டி) பரிசோதனை கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) கூறியுள்ள தகவல் இதோ:

கோவிட் தொற்று இருப்பதை விரைந்து கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு பரிசோதனை கருவியின் விலை 250 ரூபாய். இந்த கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.

மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து சுய பரிசோதனை மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருவி மூலம் எல்லோரும் கண்மூடித்தனமாக பரிசோதனை செய்து விடக்கூடாது.

இந்த பரிசோதனை கருவியை அறிகுறி நபர்கள், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆர்.ஏ.டி கிட் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து நபர்களும் மீண்டும் சோதனை செய்ய தேவையில்லை. புதிய கருவி மூலம் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள, அதற்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் செயலியில் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு செயலிலேயே காட்டும் .

ஆர்.ஏ.டி கருவி மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டு தனிமை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என, வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் “ என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!