கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று பொறுப்பேற்றார்- வீடியோ!

கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று பொறுப்பேற்றார்- வீடியோ!

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோதலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயனும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாலை 3 மணிக்கு பினராயி விஜயன் இரண்டாவது முறையாக கேரளாவின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 3 பெண்கள் உள்பட 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், முதல்வர் பினராயி விஜயனை தவிர, மற்ற அனைத்து அமைச்சர்களும் புதியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் 2 பெண்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையில் 1 பெண்ணும் இடம்பெற்றிருந்தனா்.

தற்போது அமைச்சா்களாக பதவியேற்றுள்ள பெண்களில் ஒருவரான பிந்து, கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவா். அவரே திருச்சூரின் முதல் பெண் மேயரும் ஆவார். அவரைத் தவிர ஊடகவியலாளராக பணிபுரிந்த வீணா ஜார்ஜ், முன்னாள் தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோரும் அமைச்சா்களாக பதவியேற்றுள்ளனா் என்பதும் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts