கனெக்ட் – விமர்சனம்!

கனெக்ட் – விமர்சனம்!

சிட்டியில் பிசியான டாக்டர் ஜோசப் பினாய் (வினய்)தனது மனைவி சூசன் (நயன்தாரா )மகள் அனா (ஹன்யா நாவிஷா ) ஆகியோருடன் ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இன்னமும் நம்மை விட்டு விலகாத கோவிட்டிற்கு சிகிச்சை செய்து வந்த ஜோசப் கோவிட் பாதித்து இறந்து விடுகிறார். பாசக்கார அப்பாவின் திடீர் மரணத்தால் பெரிதும் பாதிக்கப்படும் மகள் அனா . அப்பாவின் ஆவியுடன் பேச முயல்கிறார். அதனால் வித்தியாசமாக நடந்து கொள்கிறார் . இதனால் மிரண்டு போன அம்மாவும், தாத்தாவும் வேறு ஒரு பேய் அனா மீது வந்துள்ளதாக கண்டுபிடிக்கிறார்கள். இதை அடுத்து மும்பையில் உள்ள சர்ச்சில் இருக்கும் பாதர் அகஸ்டினை (அனுபம்கர் ) தொடர்பு கொள்கிறார்கள். தந்தையும் ஆன்லைன் மூலம் அனா மீது இருக்கும் துஷ்ட சக்தியை விரட்ட முயற்சிப்பதன் விளைவே ‘கனெக்ட்’ படத்தின் கதை .

சூசன் என்ற நாமகரணம் கொண்ட கேரக்டருக்கு பத்து பொருத்தத்துடன் பொருந்தி போகிறார் நடிகை நயன்தாரா. அன்பு, பரிதவிப்பு என ஒரு மிடில் கிளாஸ் அம்மாவாக அடடே சொல்ல வைக்கிறார் சுருக்கமாக சொல்வதானால் கிடைத்த சகல் இடங்களிலும் நயன் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்துப் புட்டார். வினய் சிலக் காட்சிகளே வந்தாலும் ஸ்கோர் செய்து விட்டார். அவரின் வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சத்யராஜ்; குழந்தை பேத்திக்காக நொந்து அவளை காக்க அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ஓகே சொல்ல வைக்கிறது ; நயனின் மகளாக வரும் அன்னாவின் நடிப்பு ஏனோ பிராகரஸ் ரிப்போர்ட்டில் இடம் பெறவில்லை. .ஃபாதராக அனுபம் கெர் பாஸ் மார்க் வாகி இருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் ப்ரித்வி சந்திரசேகர் சிலபல இடங்களில் ஒரு இசையையும் ஒலிக்க செய்யாமல் விட்டு அமைதியான இடங்கள் மூலம் நிறையவே பயமுறுத்த வழி செய்கிறார். மணிகண்டன் கேமராதான் இப்படத்தின் ஹீரோ, ஆனால் படம் கொரோனா காலத்தில் நடப்பது போன்று வெறும் திகிலூட்டும் காட்சிகளை மட்டுமே வைத்து பார்த்து புளித்துப் போன அதே பழைய டெம்பிளேட் பேய் கதைதான் என்பதாலும்  முழுமையாக ஈர்க்கவில்லை .என்றாலும் மிகக் குறைந்த நேரமென்பதால் பார்க்கலாம் .

மார்க் 3/5

error: Content is protected !!