பாதுகாப்பான உடலுறவு – கவனம் செலுத்தும் இந்திய இளம் பெண்கள்!

பாதுகாப்பான உடலுறவு – கவனம் செலுத்தும் இந்திய இளம் பெண்கள்!

இன்றளவும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு சினிமாக்களில் ‘பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது’ என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது. ஆம்.. ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம். ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவித்து இருந்தது..இதனிடையே இந்தியாவில் திருமணமாகாத பெண்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான உடலுறவில் மிகவும் கவனமாக இருப்பதாக தற்போதைய ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது. அதாவது, திருமணமாகாத பெண்கள் உடலுறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்துவது கடந்த பத்தாண்டுகளில் 6 மடங்கு உயர்ந்துள்ளது என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதுதான் ஹாட் டாபிக்..

கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி,15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் உடலுறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்துவது 2 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம்
20 வயது முதல் 24 வயது வரையுள்ள திருமணமாகாத பெண்கள், ஆணுறை பயன்படுத்துகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தொடர்ந்து பாரம்பரியக் கருத்தடை முறைகளைப் பின்பற்றிவருகின்றனர். அதாவது மாதவிடாய் சுழற்சிக்கேற்பச் செயல்படுதல், விந்தணுவை வெளியே விடுதல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். பல்வேறு விதமான நவீன கருத்தடை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் பாதுகாப்பான உடலுறவு என்பது பெண்களின் பொறுப்பு என எட்டு ஆண்களில் மூன்று பேர் கருதுகின்றனர். திருமணமான 99 சதவிகித ஆண், பெண் குறைந்தபட்சம் ஒரு கருத்தடை முறை பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். கருத்தடை பாதிப்பு விகிதம் (CPR) 15 முதல் 49 வயது வரையுள்ள திருமணமான பெண்களில் 54% மட்டுமே உள்ளது. மேலும் நவீன கருத்தடை முறை 10% மட்டுமே உள்ளது.

மேலும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில் பஞ்சாப் (76) முதலிடத்தில் உள்ளது. மணிப்பூர், பிகார், மேகாலயா போன்ற மாநிலங்களில் 24 சதவிகிதம் பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். சண்டிகரில் 74 சதவிகிதம் பேரும், லட்சத்தீவில் 30 சதவிகிதம் பேரும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். சீக்கிய,பெளத்த பெண்களில் 65 சதவிகிதம் பேர் நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், முஸ்லிம் பெண்களில் 38 சதவிகிதத்தினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

குடும்பத்தைத் திட்டமிடுதல் மிக முக்கியமானதாக இருக்கிறது. 15-49 வயதுடைய திருமணமான பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனக் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!