June 4, 2023

மதுரை மக்களை கவரும் வைகை மீட்டர் ஆட்டோக்கள்..!- சென்னையிலும் வருமா?

ம்மில் பலருக்கும் ஏதுவாக இருந்த Ola, Uber அல்லது Rapido போன்ற ஆப் பயன்பாடுகளால் மீண்டும் மீண்டும் சவாரி ரத்துசெய்தல் மற்றும் அதிக கட்டணக் கட்டணங்கள் ஆகியவற்றால் சோர்வடைந்துள்ளனர். இச்சூழலில் மதுரையில் கடந்த சில நாட்களாகவே வைகை மீட்டர் ஆட்டோ என்ற ஒரு ஆட்டோ மாநகரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. வைகை மீட்டர் ஆட்டோ மீட்டர் போட்டுத்தான் ஓட்டிக்கொண்டு வருகின்றனர். அட இந்த காலத்திலும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகின்றார்களா? என பலருக்கு நினைக்க தோன்றும்.

இதுகுறித்து அந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், “மதுரையில் 200க்கும் மேற்பட்டோர் மீட்டர் போட்டுத்தான் ஆட்டோ ஓட்டி வருகிறோம். 200 பேர் கொண்ட நாங்கள் கடந்த ஒரு வருடங்களாக வைகை மீட்டர் ஆட்டோ என்ற பெயரில் டிஜிட்டல் மீட்டர் மூலமாக மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டி வருகிறோம். இதனை நாங்கள் ஒரு சேவையாக செய்து வருகிறோம்.

அதாவது பூஜ்ஜியத்தில் இருக்கும் மீட்டர் அப்போது இருந்து ஓட ஆரம்பிக்கும் குறைந்தபட்ச கட்டணமாக 59 ரூபாய் நிர்ணயித்ததால் ஒன்றரை கிலோ மீட்டருக்கு அப்பால் தானாக ஆப் மூலம் டிஜிட்டல் மீட்டர் கணக்கெடுத்துக் கொள்ளும் பின்பு சவாரியை இறக்கும் இடத்தில் மீட்டரை ஆப் செய்தால் அந்த கணக்கெடுப்பில் வரும் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பின்பு ஆன்லைன் மூலமாகவே ரசித்தையையும் அனுப்பி வைக்கிறோம்.

இதன் மூலமாக முதியவர்களில் இருந்து பள்ளி குழந்தைகள் என அனைவருக்கும் இந்த ஆப் நல்ல பயன் உள்ளதாக இருப்பதால் நாங்களும் இதனை 300 பேர் கொண்ட குழுவின் மூலம் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் நல்ல முறையில் செய்து வருகிறோம். மதுரையில் உள்ள ஒவ்வொரு மூளைமுடுக்கில் இருந்து எங்க வேண்டுமானாலும் எங்கள் வைகை மீட்டர் ஆட்டோவிற்கு அழைத்தாள் நாங்கள் அங்கு சென்று மீட்டர் மூலமாக சவாரி எடுத்துக் கொள்வோம்.

தற்போது இருக்கும் டீசல் விலைக்கு எவ்வாறு மீட்டர் மூலம் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்று கேட்டால் நாங்கள் 300 பேர் இருக்கக்கூடிய இந்த வைகை மீட்டர் ஆட்டோ குழுவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சவாரி செல்லும் போது அந்த இடத்தில் இருந்து மீண்டும் இன்னொரு இடத்திற்கு செல்லும் சவாரி வருவதினால் எங்களுக்கு இதில் நட்டம் ஏதும் இல்லாமல் பொதுமக்களுக்கும் எங்களுக்கும் சமதளவில் இருக்கும் வகையில் இருக்கிறது.

இதனால் எங்களுக்கு டீசல் விலை ஏற்றார்போல் ஆட்டோவில் கிடைக்கும் மீட்டர் விலையும் சரியான அளவில் உள்ளது. தற்பொழுது கார்ப்பரேட் கம்பெனிகள் மூலமாக பல்வேறு ஆன்லைன் செயல்கள் மூலமாக ஆட்டோ இயங்கி வந்தது அதில் சில கார்ப்பரேட் முறைகேடாக செயல்பட்டதால் கம்பெனிகளை தற்பொழுது மதுரையில் மூடி உள்ளார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல முறையில் வைகை மீட்டர் ஆட்டோ என்பதை ஒரு சேவையாக செய்து வருகிறோம். ஆகையால் இதற்கு நல்ல ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். ஓலா ரேபிடோ போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளை நாடிச் செல்லாமல் எந்த ஒரு கமிஷனும் அடிக்காமல் தரமான விலையில் நேரடியாக மீட்டர் போட்டு ஓட்டும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தாங்களும் சரியான விலையில் பயணம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.” என்றனர்.

இச்சேதியைப் படிக்கும் சென்னைவாசிகள் இது போன்ற சேவை சென்னைக்கு எப்போது வரும்கேட்காமல இருக்க முடியாது இல்லையா?