ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ச்ர்க்கிள் பேஸ்டு ஆபிசர் பணிவாய்ப்பு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில்  ச்ர்க்கிள் பேஸ்டு ஆபிசர்  பணிவாய்ப்பு!

ந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சென்னை மண்டலத்திற்கு மட்டும் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Circle Based கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வங்கி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில், எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டு சலுகை, ஓபிசிக்குச் 3 ஆண்டு சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது சலுகை வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

1. Objective Type தேர்வு – ஆங்கிலம், கணினி அறிவு, வங்கி மற்றும் பொருளாதார அறிவு உள்ளிட்ட பிரிவுகள்

2. Descriptive Type தேர்வு – கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல்

தேர்வு முடிவின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும்.

சம்பளம்:

தேர்வு முடிந்த பிறகு ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு/ஓபிசி/இடபுள்யூஎஸ் பிரிவினர்: ரூ.750

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க இணையதள முகவரி:

https://sbi.co.in/hi/web/careers/current-openings

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

மே 29, 2025

error: Content is protected !!