பன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்வு – சீனா ரிப்போர்ட்!

பன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்வு – சீனா ரிப்போர்ட்!

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதி களிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரிய வருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்ட மிருகம் பன்றிகளே என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றின் ஆரம்பத்தில், பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க காடுகளில் மனிதர்களுக்கு உதவியிருக்கின்றன. அவை பூமியை கிழங்குக்காக நோண்டிப் போட்ட பின்னால், அந்த நிலங்களில் உழுவது எளிதாக ஆகிறது. தாவரங்களையும் சிறு விலங்குகளையும் பன்றிகள் தின்பதால், பன்றிகள் இருக்கும் பழங்குடி கிராமங்கள் சுத்தமானவை யாக ஆகின்றன. இன்றும் உலகத்தில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஒன்று பன்றிக்கறியாகும்.

இந்நிலையில் சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் பன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்ந்து உள்ளது. பன்றி இறைச்சி விலை உள்நாட்டில் உயர்ந்துள்ள காரணத்தினால் சீனாவில் பன்றி இறைச்சி வெளிநாடுகளிலிருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டது ஆனாலும் உள்நாட்டில் விலை உயர்வை அரசாங்கத்தால் தடுக்க இயலவில்லை.

சீனாவில் இறைச்சி போன்ற அடிப்படையான உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் என்று அறிவித்துள்ளன . அங்கு உணவுப் பொருள்களின் விலைகள் 17.4 சதவீதம் உயர்ந்துள்ளன நுகர்வோர் பணவீக்க விகிதம் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

உலகில் உற்பத்தி செய்யப்படும் பன்றி இறைச்சியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சீனாவில் உலகில் உற்பத்தியாகும் மூன்றில் இரண்டு பங்கு பன்றி இறைச்சி சீனாவில் மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது .

சீனாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பன்றி காய்ச்சல் பரவியது . அதனால் உடனடியாக பன்றி இறைச்சி விற்பனைக்கு சீன அரசு தடைவிதித்தது .துவக்கத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சீனாவிலும் பன்றி இறைச்சி விற்பனை மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய தொடங்கியது. கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து சீனா பன்றி இறைச்சியை இறக்குமதி செய்தது. அதனால் சர்வதேச சந்தையில் பன்றி இறைச்சியின் விலை உயர்ந்தது.

வர்த்தக போர் காரணமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி மீது சீனா அபராத வரி விதித்தது. அதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பண்றி இறைச்சியின் விலையும் உயர்ந்தது.

இதனிடையே பன்றிக் காய்ச்சல் காரணமாக சீனாவில் பன்றி வளர்ப்பதில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் பன்றி இறைச்சி உற்பத்தி 25 சதவீதம் குறைந்துவிட்டது .சீனாவில் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே 1.2 கோடி டன்கள் பற்றாக்குறை நிலவுவதாக அமெரிக்க விவசாய இலாகா மதிப்பிட்டுள்ளது.

இந்த பற்றாக்குறை அமெரிக்காவின் ஒட்டுமொத்த பன்றி இறைச்சி உற்பத்திக்கு சமம் என்றும் கூறியுள்ளது. சீனாவில் பன்றி இறைச்சி பற்றாக்குறை இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடிக்கும் என்று அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!