பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்ட முயலும் சீனாவால் பதட்டம்!

இந்தியாவுக்கு நீர் தேவையை அளிக்கும் பிரம்மபுத்திரா நதியில் அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இது நதியில் இருந்து நீர் பெறும் இந்தியாவுடன் மோதல் எற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மபுத்திரா நதி சீனாவில் உருவாகி திபெத் வழியாக இந்தியாவுக்குள் பாய்ந்து வருகிறது. சீனாவில் இது யர்லுங் ஜங்பாவோ என அழைக்கப்படுகிறது. இந்த யர்லுங் நதியில் சீனா அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சீனாவில் வெளியாகும் ஆசியா டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. பெர்டில் லின்ட்னெர் என்பவர் எழுதி உள்ளார். பல ஆண்டுகளாக ஆசியா பற்றி இவர் எழுதி வருகிறார்.

அதில், பிரம்மபுத்திராவில் அணை கட்டுவது குறித்து நீரை பகிர்ந்து கொள்ளும் இந்தியா அல்லது வங்க தேசத்துடன் ஆலோசனை நடத்தவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. சீனாவுடன் நல்லுறவு கொண்டுள்ள வங்க தேசமும் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பெரும் அணை கட்டுவதற்கான எந்த தொழில்நுட்ப தகவல்களும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். ஆனால், யாங்ட்செ நதியில் மின்சார உற்பத்திக்காக 3 அணைகளை கட்ட இருப்பதாக அந்நாட்டு செய்தித்தாள்கள் கூறியுள்ளன.

ஏற்கெனவே பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே கட்டப்படும் இந்த அணை குறித்து சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில், ‘”திபெத்தின் கடைசி மாகாணமான அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப்பகுதியான மேடாக் மாகாணத்தில் உள்ள யார்லங் ஜாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதி) குறுக்கே மிகப்பெரிய அணை கட்டப்பட உள்ளது.

திபெத் பகுதியில் யார்லங் ஜாங்போ நதி மிகுந்த நீர்வளம் கொண்டதாகும். 2 ஆயிரம் அடி மீட்டர் உயரத்திலிருந்து பாயும் நதியின் நீர் மூலம் 7 கோடி கிலோவாட் மின்சாரம் எடுக்க முடியும். அதாவது ஹூபே மாகாணத்தில் உள்ள மூன்று ஜார்ஜ் மின்நிலையங்களைவிட அதிகமாக மின்சாரம் எடுக்க முடியும்.

இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் சுத்தமான மின்சாரம் மூலம் சீனாவின் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்கு முன்பாக எட்ட முடியும். 2060-ம் ஆண்டுக்குள் முழுமையாக கார்பன் வெளியீட்டை நிறுத்த முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத் சுயாட்சி அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும்”. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரம்மபுத்திரா மற்றும் கங்கைக்கு நீர் அளிக்கும் பனிப்பாறைகள் சீனாவில் உள்ளன. நதியில் அணை கட்டுவதன் மூலம் மற்ற நாடுகளுக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்கும் இடத்தில் சீனா உள்ளது. அணை கட்டுவது தொடர்பாக எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, அண்டை நாடுகளிடையே சீனா மீது அவ நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது. இதனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தியா மட்டும் அல்லது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன.

error: Content is protected !!