தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார்.

அப்போது ராகுல் காந்தி பேசியது இதுதான் :

தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு மிக நீண்ட உறவு தொடர்வதால் இங்கு பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. எனது பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தி மூலம் கிடைத்த உறவாகும். நேரு குடும்ப பாரம்பரிய உறவை மேலும் வலுப்படுத்த வந்துள்ளேன். பிரதமர் மோடி, அவர் சார்ந்த பாஜக, அதன் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ். என அனைவரும் தமிழ் மொழி, பாரம்பரியம், வரலாற்றுக்கும் உரிய மரியாதை தர தவறிவிட்டனர். தமிழக மக்கள் விரும்பாததை அதிகாரத்தால் திணிக்க முயல்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழக மக்கள் யாருக்கும் அடி பணியாமல் வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் வரலாற்றை பிரதமர் படித்திருந்தால் இதனை அறிந்திருப்பார். இங்குள்ள மேடையில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்கள் சிலையை பார்க்கிறேன். அவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தமிழ் மக்கள், தமிழ் உணர்வுக்காக போராடியதை மறக்க இயலாது. அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது வழியை பின்பற்ற வேண்டும். பிரதமர் மோடி ஒரு கருத்து, ஒரு கலாசாரம், ஒரு மதம் என்ற கொள்களை புகுத்துகிறார். தமிழ் மொழியின் பழமையை அறியாமல் தேசத்தின் இரண்டாவது மொழியாக்குகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. இந்நாடு பல மொழி, பல ஜாதி, பல மதத்துடன், பன்முகத்தன்மை கொண்டதை காண முடியும். நமது பன்முகத்தன்மைதான் நாட்டின் பலமாகும்.

இன்றைய டெல்லி, தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறது. நாட்டில் விவசாயம், விவசாயிகளை அழித்து, ஒழித்துவிட்டனர். அதனால், முதன்முறையாக தில்லி செங்கோட்டையில் இருந்து குடியரசு தினத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு பதில், விவசாயிகளின் பேரணி நடக்க உள்ளதை பார்க்கிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கரோனா கால சலுகைகள் போன்றவை விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோர், சாதாரண, அடித்தட்டு மக்களுக்கானதல்ல. மோடியின் 5 நண்பர்கள் மேலும் பணக்காரர்களாக வேண்டி எடுத்த நடவடிக்கையாகும்.

அந்த 5 பேருக்காக இந்திய அரசை மோடி நடத்துகிறார். படித்தவர்களுக்கு வேலையற்ற நிலையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நமது தொழிற்சாலைகள், பொருளாதாரம் போன்றவை ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பால் அழிந்துள்ளது. முதன்முறையாகஇந்திய எல்லைக்குள் பல ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா அனுப்பியுள்ளது. நமது நிலத்தை ஆக்கிரமித்து அவர்களது நிலமென கூறுகின்றனர். நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என கூறும் தைரியமற்றவராக மோடி உள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர் நலனை காப்பதற்காக, நான் இங்கு வந்துள்ளேன்.

தமிழகத்தில் அதிமுகவை, டெல்லி மிரட்டுவதுபோல, உங்களை யாரும் மிரட்ட முடியாத நிலையை உருவாக்க இப்போது வந்துள்ளேன். காந்தி கூறியதுபோல, வலிமையானவர்களுக்கு வலிமையானவர்களை எளிமையானவர்களுக்கு எளிமையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்த வந்துள்ளேன். தமிழக மக்களின் போர் வீரனாக டெல்லியில் நான் செயல்படுவேன் என்றார்.

error: Content is protected !!