கப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு!
கேரளாவின் எழிமலாவில் உள்ள கப்பல்படை பயிற்சி அகாடமியில் பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பில் சேர்வதற்கு திருமண மாகாதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: எஜூகேசன் பிராஞ்ச் 5, எக்ஸ்கியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் 21 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன. படிப்பு நிறைவுக்குப்பின் இப்பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 2020 ஜே.இ.இ., மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
வயது: 2.1.2002 முதல் 1.7.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசிநாள்: 9.2.2021
விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு