முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் கிடையாது!- சத்தீஸ்கர் அதிரடி!

முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் கிடையாது!- சத்தீஸ்கர் அதிரடி!

ம் நாட்டில் கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இந்தாண்டின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிதாக 72,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 459 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களின் பங்கு 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு 70,000க்கும் மேல் பதிவாகியுள்ள நிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர் களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படாது என்று சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே சமயம் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 29 பேர் பலியாகியுள்ளனர். இந் நிலையில் சத்தீஸ்கர் அரசு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினி வாங்குவது, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்குவது, வளாகத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மதுபானக் கடைக்கும் தலா ரு.10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மாவட்ட கண்காணிப்புக் குழுவினர், நாள்தோறும் ஐந்து முறை மதுபானக் கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!