சதுரங்க வேட்டையாடும் தமிழன் பிரக்ஞானந்தா – கொஞ்சம் டீடெய்ல்!
உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்திருக்கிறார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வரும் உலக செஸ் தற்போது இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு உள்ளார். அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி இன்றும் மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதி ட்ரா கண்டுள்ளார்
பிரக்ஞானந்தா -இவர் 2005 இதே ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் பிறந்தார். இவரின் அப்பா ரமேஷ் பாபு இவர் சிறுவயதிலே போலியோவால் பாதிக்கப்பட்டவாராகும். இவர் ஸ்டேட் கார்ப்ரேஷன் போலியோ ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் அம்மாநாகலட்சுமி இவர் தான் பிரக்ஞானந்தாவை செஸ் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வார்.
இவருக்கு பக்கபலமாக இருந்தவர் இவரின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி ரமேஷ். இவருக்கு பயிற்சியளிக்க மற்றவர்களிடம் வாங்குவதை விட குறைந்த அளவே கட்டணம் பெற்று வந்தார்.. இவர் முதலில் அவரது அக்காவை பார்த்து தான் செஸ் விளையாட ஆரம்பித்தார். 2022-ல் ஒரு பத்திரிக்கைக்கு அவர் தந்தை அளித்த பேட்டியில் எனது பையன் 3.5 அளித்த இருந்து செஸ் போட்டிகளை விளையாடி வருகிறார். அப்போது அவர் கூறுகையில் பிரக்ஞானத்தாவும் அவரது அக்காவையும் இனைத்து விளையாட வைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. . எங்கள் குடும்பத்தில் பண நெருக்கடிதான் பிரதானமாக இருந்தது.. அதைத் தெரிந்து ஆர்.பி ரமேஷ். இவருக்கு பயிற்ச்சியளிக்க மற்றவர்களிடம் வாங்குவதை விட குறைந்த அளவே கட்டணம் பெற்று வந்தார். அவர் பிரக்ஞானந்தாவிற்கு எந்த போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று பயிற்சி அளித்தார். அவருக்கு பிரக்ஞானந்தவிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதே அவருடைய நோக்கமாக இருந்து வந்தது.
பிரக்ஞானந்தா 8 வயதிற்குட்பட்ட உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து பல போட்டிகளில் வென்றார். 2016-ல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், இளம்வயதில் சர்வதேச மாஸ்டர் என்ற புதிய வரலாற்றை படைத்தார். 2018 ஆம் ஆண்டில், அவர் 12 வயதில் 10 மாதங்கள் 13 நாட்களில், தனது இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகின்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் நம்ம நாட்டு வீரரான பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் மேக்னஸ் காரர்சனை எதிர்த்து விளையாடி வருகிறார்.இந்த போட்டியானது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை போட்டியாகும்.
மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட இந்த இரண்டாவது கட்ட ரவுண்டில் பிரக்யானந்தாவிற்கும் மேக்னஸ் காரல்சனுக்கும் இடையே ஆன போட்டி டிராவில் முடிந்தது. இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆகியிருக்கும் நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் தீர்மானிக்கும் டைபிரேக்கர் போட்டி இருவருக்கும் இடையே நடைபெறவுள்ளது. டைபிரக்கர் ஆட்டத்தில் இருவரும் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும். கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இன்று நிலவில் வெற்றிகரமாக லேண்ட் ஆன சந்திரயான் 3 போலவே நம்மூர் பிரக்ஞானந்தா ஜெயிப்பார் என்றே நம்புவோம்.
நிலவளம் ரெங்கராஜன்