செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக் (CBL) – சீசன் 1 ஃபைனலில் லாஸ்ட் இடம் பிடித்த சென்னை ராக்கர்ஸ்!
கிரிக்கெட் மற்றும் சினிமா ஆகிய இரண்டையும் இந்தியர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. அதனால் தான் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். ‘ஹிட்டிக்க’, அதே பாணியில் வந்த சினிமா பிரபலங்களின் செலிபிரட்டி கிரிக்கெட் லீக்கும் நடிகர் சங்க கட்டிட வளர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் இடம் கொடுத்தது. இந்தநிலையில் கிரிக்கெட்டைப் போலவே பேட்மிட்டனிலும் செலிபிரிட்டி லீக் போட்டியும் -அதாவது இந்தியாவின் முதல் ‘செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக்’ (சி.பி.எல்.) கடந்த செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி. மலேசியாவில் நேற்று இறுதிப் போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது

முன்னதாக இதன் தொடக்க விழா செப்டம்பரில் சென்னையில் நட்ந்த போது சி.பி.எல். நிறுவனரும், தலைமைச்செயல் அலுவலருமான ஹேமச்சந்திரன் பேசுகையில், இந்த லீக் திட்டத்தை தொடங்கவிருக்கும் எமது எண்ணங்களை நாங்கள் அறிவித்தபோது நான்கு அணி உரிமையாளர்களிடமிருந்து உடனடியாக பிரதிநிதித்துவம் எங்களுக்கு கிடைத்தது. மேலும், நிறுவனம் தொடங்கிய 6 மாதத்திலேயே ஜே.பி. அகாடமி என்ற நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை (3.3 கோடி இந்திய ரூபாய்) பெற்றிருக்கிறது.இந்த போட்டிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறுகின்றது. குறிப்பாக இதன் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடக்கிறது. இறுதிப்போட்டியை நடத்துவதற்காக மட்டும் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்படி மிகப் பரபரப்பாகவும் கடுமையான போட்டியோடும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் Tollywood Thunders beat Kerala Royals to emerge as the victors in a tightly contested final. Team Karnataka Alps was placed third while Team Chennai Rockers took the last position
இறுதிச் சுற்றுக்கு முன்பு கொச்சியிலும் மற்றும் ஹைதராபாத்திலும் நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டங்களில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் பெற்ற இடங்கள் பின்வருமாறு :
கேரளா ராயல்ஸ் முதலிடத்தையும், டோலிவுட் தண்டர்ஸ் இரண்டாவது இடத்தையும், கர்நாடகா ஆல்ப்ஸ் மூன்றாவது இடத்தையும் மற்றும் சென்னை ராக்கர்ஸ் கடைசி இடத்தையும் பெற்றிருந்தன.
இந்த ஃபைனல் போட்டி குறித்து செலிபிரிட்டி பேட்மிண்ட்டன் லீக் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஹேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், ”திரையுலக நட்சத்திர பிரபலங்கள், எங்களுடைய கூட்டாளிகள் மற்றும் எங்களுடைய அணியினர் காட்டிய ஈடுபாடு, பரபரப்பு மற்றும் விளையாட்டுத்திறமை பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருப்பதோடு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்திருப்பதற்கும் வழிவகுத்திருக்கிறது. திரைப்பட நடிகர்களுக்கு மும்முரமான ஏகப்பட்ட வேலை இருந்தபோதிலும், அனைத்து திரையுலக பிரபலங்களும், இவ்விளையாட்டுப்போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு தங்கள் திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி மலேசிய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.
இந்த லீக் போட்டியை ஒரு மாபெரும் வெற்றியாக ஆக்கிய அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் மற்றும் அணித் தலைவர்களுக்கும் எனது மனமார;ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடைய உயர்மதிப்புமிக்க லீக்-கில் அணி சேர்வதற்கு பாலிவுட் இந்தி திரையுலகம் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், எங்களுடைய அடுத்த சீசன் இன்னும் மிகவும் பெரிதாகவும் மற்றும் மிகவும் விறுவிறுப்புடையதாகவும் இருக்கும் என்பது உறுதி’’என்றார்.


