தமிழ் குரல் / AI Voice
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4,122
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) – 335
பணி: Agricultural Field Officer (Scale I) – 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) – 65
பணி: Law Officer (Scale I) – 115
பணி: HR/Personnel Officer (Scale I) – 81
பணி: Marketing Officer (Scale I) – 946
வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
