சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியிட வாய்ப்பு!

சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியிட வாய்ப்பு!

மிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது மெட்ராஸ் ஐகோர்ட் எனப்படும் சென்னை உயர்நீதி மன்றம். இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது..!

இப்பேர்பட்ட கோர்ட்டில்

எக்சாமினர் 60,

ரீடர் 11,

சீனியர் பைலிப் 100,

ஜூனியர் பைலிப் 242,

பிராசஸ் ரைட்டர் 1,

ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் 53,

டிரைவர் 27,

காப்பியிஸ்ட் அட்டென்டர் (நகல் பிரிவு உதவியாளர்)16,

ஆபிஸ் அசிஸ்டென்ட் 638,

துாய்மை 202,

தோட்டம் 12,

வாட்ச்மேன் 459,

மசால்ஜி 508 உட்பட மொத்தம் 2329 இடங்கள் உள்ளன. இதிலிருந்து மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

எக்சாமினர், பைலிப் (கட்டளை நிறைவேற்றுனர்) ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு, டிரைவர், ஆபிஸ் அசிஸ்டென்ட், காப்பியிஸ்ட் அட்டென்டர் பணிக்கு எட்டாம் வகுப்பு, மற்ற பணிக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது:

1.7.2024 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

27.5.2024

விவரங்களுக்கு:

ஆந்தை வழிகாட்டி / வேலைவாய்ப்பு

error: Content is protected !!