தமிழ் குரல் / AI Voice
கோலிவுட் இன்றழைக்கப்டும் தமிழ் சினிமா ஆரம்பத்தில் பாடல்களுக்கும் வசனங்களுக்கும்தான் முக்கியத்துவம் தந்தது. அதிலும் அவை பெரும்பாலும் புராணப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. சமூகப் படங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில்தான் தமிழ் சினிமாவுக்கு அவல நகைச்சுவை தேவைப்பட்டது. ஆனால் ,அப்படி தமிழ்சினிமாவி நகைச்சுவை என்கிற பெயரில் நடந்துவரும் கேலிக்கூத்து மிக ஆபத்தான பாதையில் அல்லது மோசமான நிலையில் பயணிக்கிறது. . ‘நகைச்சுவை நாயகர்கள்’ உருவில், தமிழ் சினிமாவை அழிக்கும் ஆபத்தான சக்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.அந்த வரிசையில் 99களில் கார்த்திக் நடித்த ‛அமரன்’ படத்தின் டைரக்டர் ராஜேஸ்வரின் மகன் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அவரது ரிலேட்டிவ் அருண் கேசவ் இணைந்து இயக்குநர்களாக அறிமுகமாகி வழங்கி இருக்கும் படம் இது. விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவத்துடன், முழுநீள படத்தில் கைவைக்க முயன்றிருக்கிறார்கள். இருப்பினும், இது ஒரு முழுமையான சினிமா அனுபவத்தைத் தராமல், விளம்பரப்படத் தன்மை அதிகமாகவே உணரப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதைதான் இருந்தாலும், பல நகைச்சுவை நடிகர்கள் இடம் பெற்றிருந்தாலும், காமெடியை உருவாக்க முடியாமல் போயுள்ளது. காரணம், பலவீனமான திரைக்கதையே.
அதாவது திருடர்களாக நடமாடி பிழைப்பை ஓட்டி வருகின்றனர் வைபவ் மற்றும் மணிகண்ட ராஜேஷ். ஆப்டி திருடிக் கொண்டு போலீஸில் மாட்டிக் கொண்டால், இவர்களை வெளியே எடுத்து வருவது லிவிங்ஸ்டன் தான். சிறுவயதில் செய்த ஒரு உதவிக்காக இருவரையும் அவ்வப்போது காப்பாற்றிவிடுவதே லிவிங்க்ஸ்டனின் வேலையாக இருக்கிறது.இதனிடையே பிரபல தாதாவான சிஹான் ஹூசைனி, லிவிங்ஸ்டனிடம் ஒரு அசைன்மண்ட் கொடுக்க, அதனை தூக்கி வைபவ் மற்றும் மணிகண்டனிடம் கொடுக்கிறார் லிவிங்க்ஸ்டன். அந்த அசைன்மண்ட் மூலம் கிடைத்த சுமார் 2 கோடி ரூபாயை, இருவரும் தொலைத்துவிட, ஹூசைனி& டீம் இருவரையும் தேடி அலைகிறது. அப்படி தொலைந்த பணத்திற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி இவர்களிடம் தஞ்சம் அடைகின்றனர் வைபவும் மணிகண்டனும்.அப்பிரச்னையை சமாளிக்கஇவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தனியார் வங்கியை கொள்ளையடிக்க ப்ளான் செய்கின்றனர்.
அப்படி திட்டமிட்டப்படி இவர்கள் அந்த வங்கியை கொள்ளையடித்தார்களா? ஹூசைய் டீமிடம் இருந்து லிவிங்ஸ்டன் , வைபவ் மற்றும் மணிகண்டன் இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் படத்தின் கதை.
ஹீரோவாக வரும் வைபவ், வழக்கமான முகபாவங்களுடன் முந்தையப் பட டைப்பிலான அதே நடிப்பை காட்டியிருக்கிறார். இனியாவது கமிட் ஆகும் ரோலுக்கு தேவையான ஆழமான வெளிப்பாடுகளை கொஞ்சம் ஹோம் ஒர்க் எல்லாம் தெளிவாக செய்து காட்ட வேண்டிய அவசியம் நேரிட்டுள்ளறது. அவர் தனது ஹீரோ பயணத்தை தொடர விரும்பினால், இதை நினைவில் வைக்கவேண்டும். நாயகியாக வரும் அதுல்யா ரவி கேரக்டர் தமிழ் சினிமாக்களில் நிகழும் வழக்கமான ரோலாகவே அமைந்துள்ளது. ஸ்கிரீனில் அவர் அழகாகத் தெரிந்தாலும், அவருக்கான ஸ்கோப் குறைவாகவே இருந்தது.
லிவிங்ஸ்டன் மற்றும் ஹூசைனி ஆகியோர் தாங்கள் கமிட் ஆன கேரக்டரின் வலுவை புரிந்து நடித்து இருக்கிறார்கள்.ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகியோர் கொள்ளைக்காரர்களாக வரும் போது அடிக்கும் காமெடி, எரிச்சலே அதிகம் தந்தது. அதிலும், ரெடின் அதே முகபாவங்களுடன் அதே மாடுலேசனுடன் இன்னும் எத்தனைக் காலம் சமாளிப்பாரோ?
டைட்டில் கார்டில் மியூசிக் இமான் போடுகிறார்கள். ஆனால் காமெடி என்றாலும் வங்கிக் கொள்ளைப் பட பின்னணி இசையை கேட்கும் போது இமானின் இசை தானா என்று சந்தேகம் வருகிறது. படம் முடிந்து எண்ட் கார்ட் போடும் போது இமான் திரையில் தோன்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்த பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த பாடல் வரும் போது பார்வையாளார்கள் பலர் ‘தப்பித்தால் போதும்’ என்பதை போல் அவசரமாக வெளியேறுவதை ஒரு தடவை இமான் நேரில் பார்த்தால் நலம்
பேங்க்கில் கொள்ளை அடிக்க போகும் காமெடியர்கள் என்ற ஒன்லைனில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல படங்கள் வந்துள்ளன. இவற்றில் ஓரிரண்டு படங்களையாவது இந்த இரண்டு டைரக்டர்களும் அரைகுறையாகவாது பார்த்ததில்லை என்று உறுதிப் படுத்திய படமிது!
மார்க் 1.75/5
