தற்கொலை முயற்சி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது!

தற்கொலை முயற்சி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது!

ஒரு மனிதனின் பிறப்ப்போ அல்லது இறப்போ அது இயற்கை என்ற விதியை மீறி, பிறப்பு என்பது மருத்துவமனை நிர்வாகிகள் நிர்ணயிப்பதும், இறப்பு என்பதை நமக்கு நாமே நிர்ணயிப்பதும் நடப்பாகி போய் விட்டது. அதிலும் தினமும் கையில் கிடைக்கும் நாளிதழ்களை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை… என்று வகைவகையான தற்கொலை செய்திகள் இடம் பெற்றிருப்பதைக் கவனித்து இருக்கலாம்.

அண்மையில் இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங் களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற் கொலையாய் நிகழ்கின்றன. இந்தியா விலேயே மிக அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் கேரளம் ஆகும். உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன என்று முன்னரே தகவல் வெளியான நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்தான் தற் கொலைக்கு முயற்சிக்கிறார்கள். எனவே அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படாது என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவிப்பாணை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் ’புதிய மனநலப்பராமரிப்புச்சட்டம் 2017இல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது முன்னதாக இருந்து வந்த மனநலப்பராமரிப்புச்சட்டம் 1987ற்குப் பதிலாக இப்புதிய சட்டம்இயற்றப்பட்டுள்ளது. புதிய சட்டமானது மனநோயர்களை மனிதாபிமான முறையில் அணுகுகிறது. மிக முக்கியமாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மனநலத்தை பேணுவதற்கான உரிமை உண்டு என்பதை உறுதிபடுத்துகிறது.

குடிமகன் ஒருவருக்கு, அவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், வீடற்றவராக இருந்தாலும், அவர் எந்த பாலினத்தவராக இருந்தாலும், மதம் மற்றும் சாதியினராக இருந்தாலும், அவர் எந்த சமூகத்  தினராகவோ, வர்க்கத்தினராகவோ, மாற்றுத்திறனாளியாகவோ இருந்தாலும், அவருக்கு மன நலத்தை பராமரித்திட உரிமை உண்டுஎன்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒருவா் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளானவராக இருக்கிறார். அவருக்கு பராமரிப்பையும் சிகிச்சையும் மறுவாழ்வையும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி எலெக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி எனப்படும் மின் அதிர்ச்சி சிகிச்சையை மனநோயர்களுக்கு அளிக்கக்கூடாது. அவருக்கு மனநோய் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் உடல் தளர்வு மற்றும் மயக்க மருந்துகள் அளித்த பின்னரே அளிக்க வேண்டும்.

மனநோயருக்கு நிரந்தர குடும்பக் கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை மேற்கோள்ளக்கூடாது. அவரை சங்கிலியால் கட்டிப்போடக்கூடாது. அவரை தனிமைச் சிறையிலோ அல்லது அறையிலோ அடைத்து வைக்கக்கூடாது. அவசியமாக இருந்தால் மட்டுமே அவரை உடல்ரீதியாக கட்டுபடுத்தும் ( மருந்துகள் மூலமாக) நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்”என்று அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!