June 3, 2023

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து!

இன்னும் சில வாரங்களில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. (CBSE) ஜூலை முதல் தேதி மற்றும் ஜூலை 15ஆம் தேதி முறையே நடைபெற இருந்த தனது 10ம், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தகவல் தெரிவித்தது.கொரோனா வைரஸ் தொற்று எல்லா இடங்களிலும் பரவி வருகின்ற காரணத்தினால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வுகளை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஐசிஎஸ்இ அமைப்பும் தனது தேர்வுகளை ரத்துசெய்ய கொள்கை அளவில் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் என்று தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்து பழைய தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவேண்டும் என்று பல மாணவர்களின் பெற்றோர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள். அந்த மனுக்கள் மீது நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

இதற்க்காக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா பிக்சர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். அவர் 12ம் வகுப்பு மாணவர்கள் மாற்றாக பின்பற்றப்பட உள்ள மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எப்பொழுது தேர்வு நடத்த பொருத்தமான சூழ்நிலை உள்ளதோ அப்பொழுது தேர்வை சிபிஎஸ்இ நடத்தும் அந்த தேர்வுகளில் ஆஜராகி தேர்வுகளை எழுதலாம் என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.இதுதொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்று துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் குறிப்பிட்டார்.

10ம் வகுப்பை பொருத்தமட்டில் இன்னும் ஒன்றிரண்டு தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் அதனால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

12ம் வகுப்பு பொருத்தமட்டில் கடந்த 3 தேர்வுகளில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு தீர்வு வழங்கப்படும். அந்த முறையை ஏற்றுக்கொள்ள விரும்பாத மாணவர்கள் தேர்வு நடத்த முடியும் பொழுது சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் அவற்றில் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். எப்பொழுது தேர்வு நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலை உருவாக்கம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று துஷார் மேத்தா பதிலளித்தார்.

அதேபோல, ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.