சிபிஎஸ்இ +2 & 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு!

சிபிஎஸ்இ +2  & 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிடுச்சு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின. சென்னை மண்டலத்தில் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைத்   தொடர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது . சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை results.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.66% பேர் தேர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும் 0.06% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதை தவிர்த்து SMS வாயிலாகவும், Digilocker மற்றும் UMANG செயலி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 5 விகிதம் அதிகம். 91 சதவீதத்துக்கும் அதிகமான மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 1.15 லட்சம் மாணவர்களும், 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 24 ஆயிரம் மாணவர்களும் பெற்றுள்ளனர்.

அதே சமயம் சிபிஎஸ்இ பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான பிப்.15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை நாடு முழுவதும் மொத்தமாக 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் இன்று மதியம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும் போது 0.05 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 92.63 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எப்படி தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியதோ, அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

அதன்படி 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேபோல் விஜயவாடா மண்டலம் 99.79 சதவிகித தேர்ச்சியை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து பெங்களூர் மண்டலம் 98.90 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்தில் உள்ள நிலையில், சென்னை மண்டலம் 98.71 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது

தனுஜா

error: Content is protected !!