32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

உலகம்

2787 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 277 / 279
செய்திகள் வரிசை (பக்கம் 277)
இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை! உலகம்

இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்: கல்யாணம் முடிந்த கையோடு நடந்த கருணைக்கொலை!

உடல் நலம் சரியில்லாமல் கடந்த இரு வரு­டங்­க­ளாக கோமா நிலையில் இருந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு திரு­மணம் செய்து வைக்­கப்­பட்டு அது முடிந்த சில மணி நேரங்ங்­களில்,அவ­ரது உயிரைக் காப்­பாற்றப் பொருத்­தப்­பட்­டி­ருந்த உயிர் காப்பு உப­க­ர­ணங்கள் நிறுத்­தப்­பட்டு அவர் மர­ணத்தை தழு­விய மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­ பெற்­றுள்­ளது. தென்­கி­ழக்கு சீனாவில் குவாங்டொங் எனும் இடத்தை சேர்ந்த ஹீ ஜிங்ஜிங் என்ற மேற்­படி பெண்­ணுக்கும் லு லாய் என்ற அவ­ரது காத­ல­ருக்கும் 2011ஆம் ஆண்டில் திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு […]

September 24, 2013 admin
கென்யா துப்பாக்கி சூடு::: தமிழர் உட்பட பலி எண்ணிக்கை 68 ஆனது உலகம்

கென்யா துப்பாக்கி சூடு::: தமிழர் உட்பட பலி எண்ணிக்கை 68 ஆனது

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள். அதன்பிறகு இப்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த சுமார் 15 தீவிரவாதிகள் […]

September 23, 2013 admin
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது! உலகம்

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.அதே சமயம் தேர்தல் நடைபெற்ற வடக்கு மாகாணம் உள்ளிட்ட 3 மாகாணங்களில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு […]

September 22, 2013 admin
தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே! உலகம்

தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும். ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவரிடம் கேட்டபோது,”இந்த டீயை […]

September 20, 2013 admin
நடுரோட்டில் நிர்வாண தியானம்- ரஷ்ய மாணவரால் சீனாவில் பரபரப்பு! Uncategorized

நடுரோட்டில் நிர்வாண தியானம்- ரஷ்ய மாணவரால் சீனாவில் பரபரப்பு!

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் மிக்க ஹைகோவ் நகரத்தில் ஹைதியான் ஆறாவது நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னலுக்கு கீழே திடீரென மாணவர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். அவரது இந்த செயலைக் கண்டு வாகன ஓட்டிகள் முதலில் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். ஆனால் படிப்படியாக அந்த மாணவர் தனது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக அமர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தார். இதனைக் கண்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் முகத்தை […]

September 19, 2013 admin
18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு! உலகம்

18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு!

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.அதன்படி மன்னர் இம்ஸ்வாதி ஏற்கனவே 13 பெண்களை திருமணம் செய்து மனைவி ஆக்கி கொண்டார். இந்த நிலையில் இவர் 14–வது திருமணம் செய்ய உள்ளார்.திருமணத்துக்கு முன்பே மன்னருடன் குடும்பம் நடத்தும் மணப்பெண் கர்ப்பம் அடைய வேண்டும். அதன் பிறகே திருமணம் நடைபெறும். அதே முறைதான் […]

September 18, 2013 admin
அமெரிக்க கடற்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:13 பேர் பரிதாப சாவு! உலகம்

அமெரிக்க கடற்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:13 பேர் பரிதாப சாவு!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று மரம் நபர்கள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். கடுமையான பாதுகாப்பான பகுதியான இங்கு அதிரடியாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று தெரிய வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடற்படை தளம் உள்ளது. கடற்படை […]

September 17, 2013 admin
விக்கிலீக்ஸ்  அஸாஞ்சே கட்சி தோல்வி! உலகம்

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் […]

September 16, 2013 admin
‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல் உலகம்

‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல்

இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு காரணமாக, அங்கு நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் நீச்சல் உடை சுற்றுகளை போட்டியாளர்கள் ரத்து செய்து விட்டனர். அதே போல் கடற்கரையில் குளியல் ஆடையில் தோன்றும் சுற்றும் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அழகி போட்டியை எதிர்த்து மாற்று அழகி போட்டி ஒன்றை நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு […]

September 16, 2013 admin
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே! உலகம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள் நிலையில் கடந்த முறை 94 வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 111வது இடத்தில் உள்ளதாக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான நிறுவனம், கடந்த 2010 முதல் 2012 வரை 156 நாடுகளில் மனிதர்களின் மகிழ்ச்சியான மனநிலை குறித்த ஆய்வு […]

September 15, 2013 admin
உடனடி செய்திகள்