மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்தது

மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம்  வழங்கி கவுரவித்தது

உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
sep 30 -lady_Malala_Yousafzai.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த 16 வயதுப் பெண் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் பெண் கல்வியை வலியுறுத்தி அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது சேவையைப் பாராட்டி, ஹார்வர்டு பல்கலைக்கழகம், 2013 ஆம் ஆண்டுக்கான “பீட்டர் ஜெ ஹோம்ஸ் மனித நேய விருது”க்கு மலாலாவை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹார்வர்டு பல்கலைக்கழகத் தலைவர் ட்ரூ ஜில்பின் பாஸ்ட் வரவேற்றார். ஹார்வர்டு ஃபவுண்டேஷன் இயக்குநரும், ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியருமான டாக்டர் எஸ்.ஆலென் கவுன்டர் விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட மலாலா பேசுகையில், மருத்துவராகி நோயாளிகளுக்குச் சேவை செய்வதை விட அரசியலுக்கு வரவே விரும்புகிறேன். அதன் மூலம் பொதுமக்களுக்கு நேரிடையாக தொண்டாற்ற முடியும்” என்றார்.மேலும் அவர்,”பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு சொர்க்கம் போன்ற பூமியாகும். எனினும், பெண் கல்வியை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்தும், மாணவிகளின் கையில் இருந்து கல்வி உபகரணங்களை பறித்து தூர எறிந்தும் மிரட்டியதால் அந்த பகுதி அபாயகரமான பகுதியாகி விட்டது.

தாங்கள் பள்ளிகளுக்கு செல்வது தலிபான்களுக்கு தெரியாமல் இருக்க, மாணவிகள் தங்களது புத்தகங்களை ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.இந்த கொடுமைகளை எதிர்த்து சிலர் மட்டுமே குரல் கொடுக்க முன்வந்தனர். ஆனால், கல்விக்காகவும், அமைதிக்காகவும் ஒலித்த அந்த சிலரது குரல்கள் வீரியம் மிக்கவை.

தலிபான்கள் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பின்னர் என் சுயநினைவை நான் முற்றிலுமாக இழந்து விட்டேன்.இங்கிலாந்தின் ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் நான் கண் விழித்தபோது, நான் எங்கே இருக்கிறேன்? என்பது எனக்கு தெரியாது. எனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? என்று எனக்கு தெரியாது. என்னை துப்பாக்கிகளால் துளைத்தவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியாது.ஆனால், இன்று நான் உயிருடன் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.”என்று அவர் பேசினார்.

Harvard University honours Malala Yousafzai for humanitarian work
****************************************************************
The Taliban is afraid of women’s power and the power of education, said Pakistani teenager activist Malala Yousafzai as she has been honoured by the prestigious Harvard University.Yousafzai, 16, an outspoken proponent for girls’ education who survived an assassination attempt by the Taliban, was at Harvard on Friday to accept the 2013 Peter J Gomes humanitarian award.

error: Content is protected !!