32°C
விளம்பரம்
Advertisement

தமிழகம்

மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!! தமிழகம்

மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!!

“குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர்தான் ‘குரு பூஜை’ என்கிறனர்.ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற குருபூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால் இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி அரசு தீவிரமாக […]

September 13, 2013 admin
தமிழ்நாட்டில்  இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை! தமிழகம்

தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை!

வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை, பகலில் வானம் மேக மூட்‌டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய […]

September 12, 2013 admin
தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை தமிழகம்

தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை

“தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அரிய கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.எனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.”என்று ராமதாஸ் யோசனை […]

September 11, 2013 admin
மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்! தமிழகம்

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்!

“மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டது” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் […]

September 10, 2013 admin
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்! தமிழகம்

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் […]

September 9, 2013 admin
சீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது! மினி ஆல்பம்!! தமிழகம்

சீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது! மினி ஆல்பம்!!

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார்.மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார்.தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து […]

September 8, 2013 admin
‘யாகாவாராயினும் நா காக்க’  – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்! தமிழகம்

‘யாகாவாராயினும் நா காக்க’ – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்!

“முதல்வருக்கு என்று உயர்ந்த பண்பாடு வேண்டாமா? பதவி இருக்கிறது என்பதற்காகவே யார்மீது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதப்பிரயோகம் செய்வதா? ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று வள்ளுவர் சொன்ன அறிவுரையைத்தான் நினைவூட்டவேண்டி இருக்கிறது. ” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தேசிய உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதை பற்றி கவலை இருக்கிறதோ, இல்லையோ, தி.மு.க. அந்த மசோதாவை ஆதரித்து விட்டது. அதனால் தமிழகத்துக்கு துரோகம் […]

September 8, 2013 admin
‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்: தமிழகம்

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது. ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான […]

September 7, 2013 admin
இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை: ராமதாஸ் எச்சரிக்கை தமிழகம்

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை: ராமதாஸ் எச்சரிக்கை

”இந்தியா மீது கடல்வழியாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கை துணை போவதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.மீறினால் மத்திய அரசு அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும்” ”என்று மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக […]

September 6, 2013 admin
தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் 144 தடை! தமிழகம்

தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் 144 தடை!

:சமூக நல்லிணக்கத்தையும், பொதுஅமைதியையும் போற்றி பாதுகாக்கும் கடமை கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144(1)-ன்கீழ் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நத்தம் காலனி உள்ளிட்ட கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் என்பவர் […]

September 6, 2013 admin
உடனடி செய்திகள்