தமிழகம்
தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் நீக்கம்!
தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இத்துடன் சேர்த்து தமிழக அமைச்சரவையை பத்தாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் […]