32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1072 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1072)
ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்! Running News

ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்!

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் முன்னணி இயக்குனர் ஷங்கர், சீயான் விக்ரம்,எமி ஜாக்சன்,சுரேஷ்கோபி உள்ளிட்ட பல டாப் பிரபலங்களை வைத்து இயக்கி வரும் படம் ”ஐ”. இப்படத்தின் பெரும்பகுதியை ஷுட் செய்து விட்ட ஷங்கர், தற்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் வில்லன் பெரும்பாலானோர் கண்களுக்கு அதிகம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர், பல மாத தேடல்களுக்குப் பிறகு சிவாஜிகணேசனின் மூத்த பிள்ளையான ராம்குமாரை கமிட் செய்துள்ளார்.இதையடுத்து,கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் […]

January 28, 2014 admin
ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு! Running News

ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு!

ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில் குற்றம் ஏதுமில்லை. பரஸ்பரம் சம்மதத்துடன் தனிமையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு கொள்வது தவறில்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.இதை எதிர்த்து சமூக நல, மத அமைப்புகள் தாக்கல் செய்த […]

January 28, 2014 admin
ஸ்டாலின் 3 மாதத்தில் செத்து விடுவார் என அழகிரி கூறினார்!:கருணாநிதி பேட்டி! Running News

ஸ்டாலின் 3 மாதத்தில் செத்து விடுவார் என அழகிரி கூறினார்!:கருணாநிதி பேட்டி!

”ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும்”என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கேட்டார்.அதே சமயம் கருணாநிதி பேட்டி குறித்து […]

January 28, 2014 admin
மரபுசார்ந்த பார்வைக் குறைபாட்டை போக்கும் நவீன மரபணு சிகிச்சை வெற்றி! Running News

மரபுசார்ந்த பார்வைக் குறைபாட்டை போக்கும் நவீன மரபணு சிகிச்சை வெற்றி!

மரபுசார்ந்த அரிய வகை பார்வை குறைபாட்டை மரபணு சிகிச்சை மூலம் போக்க முடியும் என்ற வியத்தகு சாதனையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.அதே சமயம் ‘இந்த மரபணு சிகிச்சையின் பலன் நோயாளியின் இறுதிக் காலம் வரை நீடிக்குமா…? என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது’ என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுப்பீல்டு கண் ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ராபர்ட் மக்லெரன் தெரிவித்துள்ளார். விழித்திரைக்கு பின்புறம் உள்ள ஒளியை உள்வாங்கும் செல்கள், மெல்ல மெல்ல வலுவிழந்து, […]

January 28, 2014 admin
நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (6) *** By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (6) *** By கதிர்

பத்திரிகை அதிபர் தொடர்ந்தார்: பத்திரிகையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் அமைந்த செல்வாக்கு ஓர் எல்லையோடு நின்றுவிடும். ஆசிரியருக்கு அப்படியல்ல. அரசு எந்திரத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க மாட்டார்கள். நாடறிந்த பிரபலங்களை ஆசிரியர் பொறுப்பில் நியமிக்கும்போது இந்த வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாகும். இன்று நம்முடன் மோதும் பத்திரிகை இந்த ஏற்பாட்டை எவ்வளவு சாதுரியமாக பயன்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா? காலையில் பிரதமரோடு வாக்கிங், […]

January 28, 2014 admin
கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்..! Running News

கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்..!

எல்ஜி ஏசி கம்பெனி இந்தியாவில் ஒரு புது வகை ஏசியை உருவாக்கியுள்ளது. இதற்கு 4டி ஏசி என பெயர் சூட்டியுள்ளார்கள்! காரணம்..எல்லா பக்கங்களிலும் காற்று வீசக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அது போக இதில் ஐயன்ஸர் இருப்பதால் 99% பேக்டீரியா இல்லாத ஒரு அறையாக இருக்கும். இது 5 ஸ்டார் செர்ட்டிஃபிக்கேஷன் பொருத்தபட்டதால் 53% மின்சாரம் மிச்சம் ஆகும். இதில் மெயின் ஹைலைட் முதன் முறையாக கொசுவை ஒழிப்பதற்க்காக இந்த ஏசியில் இருந்து ஒரு அல்ட்ரா சவுன்ட் ஒலிகள் […]

January 28, 2014 admin
பாம்பன் பாலம்-   உருவான வரலாறு! Running News

பாம்பன் பாலம்- உருவான வரலாறு!

வரலாற்றுப் பெருமையும்,பாரம்பரியமும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார். நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் […]

January 28, 2014 admin
உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட் !- சோனி அறிமுகம்! Running News

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட் !- சோனி அறிமுகம்!

சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும். மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு […]

January 27, 2014 admin
கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்! Running News

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக […]

January 27, 2014 admin
தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில! Running News

தலைவலியை ஏற்படுத்தும் உணவுகளில் சில!

இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தமே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அதனால் மட்டும் தலைவலி வருவதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதிகம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால் தான் தலைவலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போது அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகைய தலைவலியை […]

January 27, 2014 admin
உடனடி செய்திகள்