32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1064 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1064)
உணர்ச்சியுள்ள செயற்கைக் கைகள்! – விஞ்ஞானிகள் சாதனை! Running News

உணர்ச்சியுள்ள செயற்கைக் கைகள்! – விஞ்ஞானிகள் சாதனை!

இன்றைய காலக் கட்டத்தில் அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். மற்றும் சில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இது போல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.இந்நிலையில் செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை […]

February 7, 2014 admin
படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்! Running News

படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்!

உலகத்தில் உள்ள அன்புகளில் ஈடு இணை இல்லாதது தாயன்பு மட்டும் தான். தள்ளாத வயதிலும், படுத்தப் படுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி.கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பெரலைஸிஸ் என்ற பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார். இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ […]

February 7, 2014 admin
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்! Running News

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்!

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று […]

February 7, 2014 admin
மஹிந்தரா மின்சார கார் இந்தியாவில்! Running News

மஹிந்தரா மின்சார கார் இந்தியாவில்!

மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் ஸ்போர்ட்ஸ் கார் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு நேற்று டெல்லியில் அறிமுகபடுத்தபட்டது. இதன் சிறப்பு அம்சம் இதன் லுக் – அப்படியே போர்ஸ்ஹே கரெரா 911 காரை போல் உள்ளது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லலாம். அதற்க்கு ஒரு மணி நேரம் தான் பிடிக்கும். மேலும் இது அநாவசியமாக புகை வெளியிடுவதில்லை: எலக்டிரிக் கார்கள் மூலம் அதிகமான புகை வெளியேறுவதில்லை. முக்கியமாக பெட்ரோலிய பொருள்களில் இருந்து வெளியேறும் […]

February 7, 2014 admin
அதற்கு இவர் சரிப்பட மாட்டார்! இழு தள்ளு (2) by கதிர் Running News

அதற்கு இவர் சரிப்பட மாட்டார்! இழு தள்ளு (2) by கதிர்

’ஆமாம், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது என் தந்தை ராஜிவ் காந்தி தலைமை வகித்த காங்கிரஸ் அரசுதான்...‘ஆமாம், இந்த தேர்தலில் பிஜேபிதான் அதிக இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைக்கப் போகிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மனதை தயார்படுத்திக் கொண்டுவிட்டது...‘இல்லை, காங்கிரஸ் ஒருவேளை ஜெயித்தாலும்கூட நான் பிரதராக மாட்டேன். எங்கள் கட்சியில் என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது வருவார்கள்…’—இப்படியெல்லாம் ராகுல் காந்தி பதில் சொல்லி இருந்தால், எதிர்க்கட்சியினரும் […]

February 7, 2014 admin
பொதுத்துறை வங்கிகள் திங்கள் & செவ்வாய் கிழமை ஸ்ட்ரைக்! Running News

பொதுத்துறை வங்கிகள் திங்கள் & செவ்வாய் கிழமை ஸ்ட்ரைக்!

எஸ்பிஐ போல அனைத்து வங்கிகளிலும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் ஏற்ற கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 தேதிகளில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடக்கவுள்ளது. வெகுநாட்களாக சொல்லி வந்த இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க , கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து சமாதானம் பேசுமாறு […]

February 7, 2014 admin
நாடாளுமன்றத்தில்  2 நாளில் மக்கள் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீண்! Running News

நாடாளுமன்றத்தில் 2 நாளில் மக்கள் வரிப்பணம் ரூ.6.75 கோடி வீண்!

தமிழக மீனவர் பிரச்சினை, தெலங்கானா பிரச்சினை ஆகியவற்றை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முக்கிய அலுவல்கள் ஏதும் முடிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த இரண்டு தினங்கள் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.6,75கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் செயல்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு 2.5 லட்சம் செலவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இன்று காலை மக்களவை கூடியவுடன், ஒன்றுபட்ட ஆந்திரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி குவிந்தனர். இதே […]

February 6, 2014 admin
இலங்கைத் தமிழர் இன்னலைக் காட்டும் ‘சிவப்பு’ !- Running News

இலங்கைத் தமிழர் இன்னலைக் காட்டும் ‘சிவப்பு’ !-

க்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் – புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு” இதில் ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார். நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார்.கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா,செல்வா,போஸ்வெங்கட்,ஏ.வெங்கடேஷ், அல்வாவாசு, பூராம் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்…..” சிவப்பு என்பது நிறம் மட்டுமல்ல பல உணர்ச்சிகளின் […]

February 6, 2014 admin
எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்! Running News

எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்!

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் விவரம்: 1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ் தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம். வயது: 31.12.2012 அன்று […]

February 6, 2014 admin
வாட்டிகனில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! – ஐ. நா. கண்டனம் Running News

வாட்டிகனில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! – ஐ. நா. கண்டனம்

வாட்டிகனில் கிறிஸ்வத ஆலையத்தில் சிறுவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகுவதாகவும், அதனை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்டு மறைத்து வருகிறது ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு ஐ.நா. மன்ற குழு வாட்டிகன் நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கண்ட செய்தியில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் பாதிரியார்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா. குழு வாட்டிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் […]

February 6, 2014 admin
உடனடி செய்திகள்