32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 96 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 96)
உலக குடை தினமின்று! Exclusive

உலக குடை தினமின்று!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு, மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமின்றி, இந்த நாளில், நாம் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. பழங்காலத்தில் சூரியனின் நிழல் மனிதர்களின் மேல் விழாமல் தடுக்கவே குடை பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரில் 3500 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டு வந்ததாம். […]

February 10, 2024 admin
இதே பிப்ரவரி 4ல்தான், தற்போதைய ஹாட் சோஷியல் மீடியாவான பேஸ்புக் பொறந்துச்சு..! Exclusive

இதே பிப்ரவரி 4ல்தான், தற்போதைய ஹாட் சோஷியல் மீடியாவான பேஸ்புக் பொறந்துச்சு..!

😍ஹார்வேர்ட் யுனிவர்சிட்டியில், தக்கனூண்டு இன்வெஸ்ட்மெண்டில் தொடங்கி, இன்னிய தேதியிலே நூறு கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், ஏதாச்சும் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமா அமைந்துள்ளது. அப்பேர் பட்ட பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகத் தெரிஞ்சக்கலாமா? 1. ஓர் எளிய தொடக்கம்: 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், […]

February 4, 2024 admin
மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ வீரமாமுனிவர்! Exclusive

மறைப்பணியுடன், தமிழுக்கு அறிவுத்தேனையும் சேர்த்த தமிழ்த்தேனீ வீரமாமுனிவர்!

நம் நாட்டுக்கு இந்தியாவுக்கு மறை பரப்பும் பணியில் ஈடுபட வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, இத்தாலியைச் சேர்ந்தவர். 1710-ம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கினார். 1716-ம் ஆண்டு ஏலாக்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார். முதலில் தன் பெயரைத் தமிழில் தைரியநாதர் என்றுதான் மாற்றிக்கொண்டார். பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என்று பெயர் சூட்டிக்கொண்டார். அத்துடன் தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். தமிழ் அகராதித் துறைக்கு […]

February 4, 2024 admin
உலக சதுப்பு நில தினமின்று! Exclusive

உலக சதுப்பு நில தினமின்று!

தற்போது பெருகிவரும் நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட், சுற்றுலா மையங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல் மற்றும் வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், இறால் பண்ணைகள் போன்றவற்றால் சதுப்பு நிலங்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன. புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் சதுப்பு நிலங்கள் பாதுகாக்கின்றன. அதாவது உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக் காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன. அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் […]

February 2, 2024 admin
அரசியலில் ஓர் அபூர்வ வைரம் -ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்! Exclusive

அரசியலில் ஓர் அபூர்வ வைரம் -ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர். இவர் பிப்ரவரி 1,1895-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓமந்தூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் தெலுங்கு பேசுகின்ற ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். நல்ல எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று வளர்ந்ததற்கு இவர் ஒரு முக்கிய காரணம். இவரை […]

February 1, 2024 admin
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளார் ஜோதியான நாளின்று! Exclusive

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளார் ஜோதியான நாளின்று!

இராமலிங்கம் என்பது இவரின் இயற்பெயர். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். சொற்பொழிவாளர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, இதழாசிரியர், போதகர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப் பிணி போக்கிய அருளாளர், நூலாசிரியர், தீர்க்கதரிசி, தமிழ் மொழி ஆய்வாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் இவர். எதிலும் பொது நலம் வேண்டும் என்று கடைசி வரை எந்த பயனும் கருதாமல் வேண்டி வந்தவர்களுக்கு எந்த பாகுபாடும் கருதாமல் உதவி […]

January 30, 2024 admin
இந்திய செய்தித் தாள் தினம்! Exclusive

இந்திய செய்தித் தாள் தினம்!

கொஞ்சம் மிகை என்றாலும் ஜனநாயகத்தின் நான்காவது தூண்தான் பத்திரிகை .உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம்….!மக்களை உயர்த்தி செல்லும் பெருமை பத்திரிகைகளுக்கு உண்டு. இன்னும் பத்திரிக்கைகள் உலக மக்களை ஒரே இனமாகக் கருதும் ஒருமைப்பாடு வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன.உலகியல‌றிவு, மொழி பயிற்சி, வாழ்வாங்கு வாழும் வழி, நகை, உடை. உவகை, வீரம், சோகம் போன்ற பல‌வகை உள்ளச் சுவைகளும் படிப்பதால் அமைகின்றது. தொழில் வளரவும், […]

January 29, 2024 admin
ஓவியர் மணியம்! Exclusive

ஓவியர் மணியம்!

1924 ஆம் ஆண்டு பிறந்த மணியம் இள வயதிலேயே ஓவிய ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை ஓவியக்கலை கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அதனை முழுவதும் முடிக்கும் முன்னரே ஆசிரியர் கல்கியால் அடையாளம் காணப்பட்டு கல்கி இதழுக்கு படம் வரைய துவங்கினார். அதாவது 1941ம் ஆண்டு கல்கி அவர்களின் அறிமுகம் மாணவர் சுப்பிரமணியத்துக்குக் கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த அந்த அறிமுகத்தில், கல்கி பத்திரிகையில் ஓவியம் வரைய வாய்ப்பு கோருகிறார் இளைஞர் சுப்பிரமணியம். அவர் ஓவியர்தான் என்பதற்கு அடையாளமாக அந்த […]

January 26, 2024 admin
“வந்தே மாதரம்” பாடலுக்கு தேசிய அந்தஸ்து கிடைத்த நாள்! Exclusive

“வந்தே மாதரம்” பாடலுக்கு தேசிய அந்தஸ்து கிடைத்த நாள்!

வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது., இந்திய விடுதலைக்கு முன்னர் வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. ஆனால் இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். அதை […]

January 24, 2024 admin
வீரத்தின் விளைவிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்! Exclusive

வீரத்தின் விளைவிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை குறிக்கும் வகையில், ஜனவரி 23 ‘பராக்கிரம தினம்’ ஆக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.. இதன் மூலம், நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நேதாஜியைப் போன்று கடினமான காலங்களில் உறுதியுடன் செயல்படுவதற்கும், நாட்டுப் பற்றை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவார்கள். ஜனவரி 23-ஐ ‘பராக்கிரம தினமாக’ அறிவிக்கும் மத்திய அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது..உண்மையில் நம் நாட்டை 200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து […]

January 23, 2024 admin
உடனடி செய்திகள்