32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சர்ச்சை

319 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 32
செய்திகள் வரிசை (பக்கம் 4)
டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசின் புதிய முயற்சி! Exclusive

டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசின் புதிய முயற்சி!

இந்தியாவில் செய்தி நுகர்வு முறை டிஜிட்டல் தளங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், ஆன்லைன் செய்திகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் ஊடகத்துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தன்னிச்சையாகச் செயல்படும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் குரலை ஒடுக்க, தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கச் சொல்லும் ‘டேக் டவுன்’ (Takedown) உத்தரவுகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் கவலைகள் எழுந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி […]

April 7, 2026 admin
நீதிமன்றங்களில் நீடிக்கும் பாரபட்சம்:இந்திய பெண் வழக்கறிஞர்களின் குரல்! Exclusive

நீதிமன்றங்களில் நீடிக்கும் பாரபட்சம்:இந்திய பெண் வழக்கறிஞர்களின் குரல்!

இந்திய சட்டத்துறையில் பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத தடைகளையும், அமைப்பு ரீதியான பாகுபாடுகளையும் “இந்திய பெண் சட்ட வல்லுநர்களின் குரல்களைப் பதிவு செய்தல்” (Documenting Voices of Women Legal Professionals in India) என்ற புதிய ஆய்வறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) நாடு முழுவதும் 2,604 பெண் வழக்கறிஞர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், தகுதி இருந்தும் பாலின ரீதியாகப் புறக்கணிக்கப்படும் கசப்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 81% விழுக்காடு: […]

March 27, 2026 admin
திருமண வாக்குறுதி… செக்ஸ்… பிரிவு 69: நீதிமன்றங்கள் ஏன் வழக்குகளை தள்ளுபடி செய்கின்றன? Exclusive

திருமண வாக்குறுதி… செக்ஸ்… பிரிவு 69: நீதிமன்றங்கள் ஏன் வழக்குகளை தள்ளுபடி செய்கின்றன?

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிவு 69, தற்போது இந்திய சட்டப்புலத்திலும் நீதித்துறை வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி உடலுறவு கொள்ளுதல்” தொடர்பான இந்தச் சட்டப்பிரிவை உயர் நீதிமன்றங்கள் ஏன் பல வழக்குகளில் ரத்து செய்கின்றன என்பது குறித்த விவாதங்கள் பரவுகின்றன . ஆம்.. இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மாற்றப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) நடைமுறைக்கு வந்தபோது, பெண்களின் பாதுகாப்பிற்காகச் சேர்க்கப்பட்ட முக்கியமான […]

March 25, 2026 admin
Zomato-Swiggy — இது டிஜிட்டல் சேவையல்ல, பகற்கொள்ளை! Exclusive

Zomato-Swiggy — இது டிஜிட்டல் சேவையல்ல, பகற்கொள்ளை!

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு என்ற செய்தி வந்தவுடனேயே, உணவகங்கள் கவலைப்படுவதை விட, ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Zomato மற்றும் Swiggy ஆகியவைதான் அதிக உற்சாகமடைந்திருக்கின்றன போலத் தெரிகிறது. மக்களின் இக்கட்டான சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அவர்கள் பாக்கெட் மீது மீண்டும் ஒரு பெரிய அடியை இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து அடித்திருக்கின்றன. இது ஏதோ தற்செயலான ‘காஸ்ட்’ (Cost) உயர்வு அல்ல; இது அப்பட்டமான கார்ப்பரேட் ‘கிரீட்’ (Greed – பேராசை)! ஆரம்பத்தில், “வீட்டுக்கே […]

March 24, 2026 admin
கூகுள் தேடலில் ஏஐ (AI) அத்துமீறல்:செய்திகளின் தலைப்புகளை மாற்றும் போக்கு அதிகரிப்பு! Exclusive

கூகுள் தேடலில் ஏஐ (AI) அத்துமீறல்:செய்திகளின் தலைப்புகளை மாற்றும் போக்கு அதிகரிப்பு!

கூகுள் தேடுபொறியின் (Google Search) அடிப்படை அடையாளமே அதன் நம்பகத்தன்மைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் எதைத் தேடினாலும் திரையில் தோன்றும் அந்த ’10 நீல நிற லிங்குகள்’ (10 blue links) தான் இணையத்தின் அச்சாணியாக இருந்து வருகின்றன. ஆனால், இப்போது அந்த மரபை உடைக்கும் வகையில் கூகுள் ஒரு அதிரடி மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆம்.. இணையதளங்கள் தங்களின் செய்திகளுக்கு வைக்கும் அசல் தலைப்புகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் […]

March 23, 2026 admin
சுப்ரீம் கோர்ட்டின் ‘முதுகெலும்பு’ எங்கே? – கருத்து சுதந்திர தடை உத்தரவு! Exclusive

சுப்ரீம் கோர்ட்டின் ‘முதுகெலும்பு’ எங்கே? – கருத்து சுதந்திர தடை உத்தரவு!

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை, “அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள் பெரியதா? அல்லது ஒரு நிறுவனத்தின் கௌரவம் பெரியதா?” என்ற மிகப்பெரிய விவாதத்தை தேசம் முழுவதும் கிளப்பியுள்ளது. 14 வயது சிறுவர்களுக்கான ஒரு பாடப்புத்தகத்தை சுப்ரீம் கோர்ட் தடை செய்திருப்பது, அதன் வலிமையைக் காட்டுகிறதா அல்லது பலவீனத்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாடப்புத்தகத்தில் இருந்த ‘அபாயகரமான’ உண்மை பிப்ரவரி 26, 2026 அன்று, ஒரு குடிமையியல் […]

March 19, 2026 admin
அனிமேஷன்:ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரம்! Exclusive

அனிமேஷன்:ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரம்!

திரைக்கலை வரலாற்றில் அனிமேஷன் என்பது கற்பனைத் திறனின் உச்சம். மனிதர்களால் நேரில் படம்பிடிக்க முடியாத உணர்வுகளையும், உலகங்களையும் திரையில் கொண்டு வரும் ஒரு உன்னத ஊடகம் இது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உலகப் புகழ்பெற்ற அகாடமி விருதுகள் (Oscars) போன்ற மேடைகளில் இத்துறை இன்றும் ஒரு ‘இரண்டாம் தர’ கலை வடிவமாகவே பார்க்கப்படுவது வேதனையளிக்கிறது. 1. “குழந்தைகளுக்கானது” என்ற தவறான பிம்பம் (The ‘Kids’ Genre Myth) அனிமேஷன் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை, இது […]

March 16, 2026 admin
‘அன்னபூர்ணா’க்கள் சூரிய ஒளி அடுப்புக்கு மாறாதது ஏன்? Exclusive

‘அன்னபூர்ணா’க்கள் சூரிய ஒளி அடுப்புக்கு மாறாதது ஏன்?

யார் எதைச் சொன்னாலும், அதற்கு ஆயிரம் வியாக்கியானங்களும் தர்க்கங்களும் பேசி, தங்களை மேதாவிகளாகக் காட்டிக்கொள்ளும் அன்னபூர்ணா போன்ற பெரிய உணவகங்கள் கூட, சிலிண்டர் தட்டுப்பாடு என்ற ஒரே நாளில் பாதி ஷட்டரை மூடிவிட்டன. மேற்கு ஆசியாவில் போர் மூண்டால், இங்கே கோயம்புத்தூரிலும், சென்னையிலும் அடுப்பு எரியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். ஆனால், இந்த அவலநிலைக்குப் போர் மட்டும்தான் காரணமா? அல்லது நம் உணவகங்களின் அப்டேட் ஆகாத மெத்தனப் போக்கா? தர்க்கம் பேசும் வாய்.. தயங்கும் கை! ஜி.எஸ்.டி […]

March 10, 2026 admin
ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி Exclusive

ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் பெயரையும், அதன் இலச்சினையையும் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்துகளைப் பரப்புவதைக் கண்டிக்கிறோம் என்று மட்டும் சொல்வது இன்று சிலருக்குப் பிழைப்பாகவே போய்விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூச்சலிடும் முகமே இல்லாத “சமூக வலைதளப் போராளிகள்”, இன்று எல்லையைக் கடந்து அருவருப்பான சொற்களைப் புழங்கத் தொடங்கியுள்ளனர். இதை வெறும் ‘கண்டனம்’ என்ற ஐந்து எழுத்தில் கடந்து செல்வது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு. அருவருப்பானச் சொல்லாடல்: […]

March 4, 2026 admin
மெடிக்கல் காலேஜ் தேவையில்லையா? எலான் மஸ்க்கின் அதிரடி ‘மெடிக்கல்’ குண்டு! Exclusive

மெடிக்கல் காலேஜ் தேவையில்லையா? எலான் மஸ்க்கின் அதிரடி ‘மெடிக்கல்’ குண்டு!

எதைச் சொன்னாலும் அது விவாதப் பொருளாக மாறும் என்பது எலான் மஸ்க்கிற்குத் தெரியும். விண்வெளி, எலக்ட்ரிக் கார், சமூக வலைதளம் என எல்லாவற்றிலும் தனது முத்திரையைப் பதித்த மஸ்க், இப்போது மருத்துவக் கல்வி முறையையே கேள்விக்குறியாக்கியுள்ளார். “மருத்துவப் பள்ளி செல்வது வீண்” (Medical School is Pointless) என்று அவர் கிளப்பியுள்ள புதிய சர்ச்சை, உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மஸ்க் ஏன் இப்படிச் சொல்கிறார்? எலான் மஸ்க்கின் பார்வையில், […]

March 1, 2026 admin
உடனடி செய்திகள்