32°C
விளம்பரம்
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!. 

admin சேலம் Published: January 28, 2018 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இது இந்த ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

ஜனாதிபதி தனது உரையின் போது மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றி கோடிட்டு காட்டுவார் என்று தெரிகிறது. குறிப்பாக பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினர் சலுகைகள் பெறும் விதத்தில் அவருடைய உரை அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-2019-ம் நிதி ஆண்டுக் கான மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிதி  அமைச்சர்  அருண்ஜெட்லி தாக்கல் செய்வார்.

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெறும். மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்