மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் அல்வா தயாரித்தார்!
அல்வா கிண்டும் பாரம்பரியத்துடன் மத்திய பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கி யுள்ளது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஆவ ணங்களை அச்சிடும் பணி தொடங்கும்போது அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்குவது வழக்கம். வரும் 1ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் உரை உள்ளிட்டவற்றை அச்சிடும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அச்சகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்று அல்வா சாப்பிட்ட பணியாளர்கள் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை வெளி உலகத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையிலிருந்து மத்திய நிதியமைச்சர் மற்றும் ஒரு சில மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பட்ஜெட் ரகசியங்கள் வெளியாகக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த பட்ஜெட் அச்சடிப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லி போலீஸ், மத்திய உளவுத்துறையினர் ஆகியோர் கொண்ட மூன்று அடுக்குப் பாது காப்பு அளிக்கப்படுகிறது.நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப் படுவதையொட்டி இந்த பாரம்பரிய நடைமுறைபடி அல்வா கிண்டும் நிகழ்ச்சி யுடன் அச்சிடும் பணிகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியில்தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பட்ஜெட் அச்சடிப்புப் பணியின் ருசிகர ரகசியங்கள் கொஞ்சம் இதோ:
ஆங்கிலேயர் காலம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகையில் பட்ஜெட் பிரதிகள் அச்சிடப் பட்டு வந்தன. அதில் சில பக்கங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு முன்பாக வெளியில் கசிந்த தால் அருகிலுள்ள வடபகுதி கட்டிடத் துக்கு மாற்றப்பட்டது’
நிதித்துறை அலுவலர்கள் விரும்பி ஏற்கும் இந்தச் ‘சிறை’ யில் சுமார் 16 நாள்களுக்கு தனித் தீவாக வாழ வேண்டும். இடையில் ஏதேனும் கட்டாயம் ஏற்பட்டால் குடும்பத்தாருடன் தொலைபேசி யில் ஸ்பீக்கரில் மட்டுமே பேச முடியும்
இந்த பணிக் காலத்தில் காலையில் விழிப்பது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள்ளேயே வாழ வேண்டும். தேநீர் முதல் உணவு வரை தேவையான பண்டங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவையும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும்.
இந்த கதவுகளுக்குள் பாதுகாப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை. சில நேரங்களில் ஊழியர் களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்பில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
பட்ஜெட் அச்சடிப்புப் பணி களை மேற்பார்வையிட வரும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோத னைகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்போது மொபைல், லேப் டாப் உட்பட எந்தவிதமான எலக்ட் ரானிக் சாதனங்களையும் அமைச்சர் பயன்படுத்த அனுமதியில்லை.
கடைசி கட்டமாக அமைச்சரின் உரை மற்றும் செய்திக்குறிப்புகள் அச்சடிக்கப்படும். இவற்றை தயார் செய்ய மத்திய அரசின் செய்தி தொடர்புத் துறை அதிகாரிகள் சிலரும் ஓரிரு நாள்கள் ‘சிறைபட” வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் லண்டனின் விடியல் நேரத்தை மனதில் வைத்து மாலை ஐந்து மணிக்கு பட்ஜெட் தாக் கல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது.
கடந்த 2001- ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆங்கிலேயர் நடைமுறையை மாற்றினார். இந்திய நாட்டின் பட்ஜெட்டை நமது நேரத்துக்கு ஏற்ப காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.