அமெரிக்கா மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து ! – அதிபர் ஜோ பிடன் அறிவிப்பு!

அமெரிக்கா மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து ! – அதிபர் ஜோ பிடன் அறிவிப்பு!

மெரிக்காவில் கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கடனில் தலா 10 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) தள்ளுபடி செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

நம் நாட்டில் இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? என பல விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்காவில் பட்டதாரி மாணவர்களின் கல்விக் கடனில் ரூ.15 லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். இவை அந்தநாட்டின் பண வீக்க நெருக்கடியில் புதிய மாற்றம் ஏற்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பை அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக மாணவர்களின் கடன் 1 புள்ளி 6 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இந்த கடன் சுமை இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அங்குள்ள நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே கடன் பெற்ற மாணக்கர்களுக்கு 50 ஆயிரம் டாலர் வரை அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடனில் சிக்கி தவிக்கும் கல்லூரி மாணக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் டாலர் தள்ளுபடி செய்வதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இதனால் பணவீக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நாட்டு கல்வி செயலாளர் மிகுவல் கார்டோனா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிடன் அரசு கல்வி கடன் தள்ளுபடி செய்துள்ளதால், ஒவ்வொரு மாணக்கர்களும் சிரமமின்றி பட்டம் பெற்று தங்களது ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இது வழி வகுக்கும் என கூறியுள்ளார்.

மேலும், கல்வி கடனே அவர்களுக்கு பெரும் சுமையாக மாறுவதால், மாணக்கர்கள் தங்களது எதிர்கால கனவாக வீடு வாங்குவது, குடும்ப சுமையை குறைப்பது போன்றவை பெரும் கவலையாக இருந்து வந்தன என அவர் அவ்வறிக்கையில் கூறியுள்ளார். மாணக்கர்களுக்கான கல்வி கடன் தள்ளுபடி அறிவிப்பால் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஜோ பிடனுக்கான ஆதரவு பெருமளவு பெருகி உள்ளது.

error: Content is protected !!