திராவிட மாடல் முன் குஜராத் மாடல் நிர்வாகம் என்பது…!?

திராவிட மாடல் முன் குஜராத் மாடல் நிர்வாகம் என்பது…!?

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தனது மாநிலம் “குஜராத் மாடல் என்பது வளர்ச்சியின் மாடல்” என்று தேர்தல் பிரச்சாரங்களில் பேசியேதான் குஜராத்தில் மாநில முதலவர் நாற்காலியில் இருந்து இன்று இருக்கும் இந்திய பிரதமர் நாற்காலியை அடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. குஜராத் மாடல் என்று சங்கிகளால் ரொம்பவுமே சிலாகிக்கப்படும் மாநில நிர்வாகம் மிகவும் பூதாகரமாக ஊதி பெரிதாக கட்டமைக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் மட்டுமே. மோடியின் குஜராத் மாடல் நிர்வாகத்தில் அரசுக்கும் கார்ப்பரேட் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு வேகம் பெற்றது. கார்போரேட்டுக்கள் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்தி கொள்ளை லாபம் பார்க்க முடிந்தது. நிறைய நிலங்களை குறைத்த விலையில் விரைவாக கையகப்படுத்தி அரசிடமிருந்து எக்கச்சக்கமான வரிச் சலுகைகளைப் பெற்றனர். இப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகள் அளிக்கப்பட்ட பிறகு, கீழ்த்தட்டு மற்றும் ஏழைகளுக்கு கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதற்கான நிதி ஆதாரங்கள் மோடியின் அரசிடம் மிக குறைந்த அளவிலேயே இருந்தன. தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போற்றி கொண்டாடும் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சமூக நீதி கோட்பாடுகள் மருந்துக்கு கூட குஜராத் மாடலில் கிடையாது.

தமிழ்நாட்டை ஆளும் திராவிட மாடல் அரசு தன் வருடாந்திர பட்ஜெட்டில் 16 % அளவுக்கு கல்வி சார்த்த செலவினங்களுக்காக ஒதுக்கி இருக்கிறது. மோடியின் குஜராத் மாடல் நிர்வாகத்தில் குஜராத் அரசாங்கம் தனது வருமானத்தில் 2% க்கும் குறைவாகவே கல்விக்காக செலவிட்டது (Normal spending by a state is 5-6%) இதன் விளைவாக குஜராத்தில் 45% தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் அல்லது ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் என்ற அளவிலேயே அவர்களின் கல்வி தரம் இருக்கிறது. அடிப்படையான நிதி ஆதாரங்களை கல்விக்காக ஒதுக்கி பணியாற்றுவதால் GER (Gross Enrollment Rate) போன்ற கல்வி மற்றும் மனித வள குறியீட்டில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இப்படியான திராவிட மாடலின் அசுரத்தனமான கல்வி பணிக்கு முன் குஜராத் மாடல் என்பது ஒரு நோஞ்சான் குழந்தை மட்டுமே. திராவிட மாடல் நிர்வாகம் நடக்கும் தமிழகம் அனைத்து வகையான சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனில் மாநிலங்களின் சராசரியான 5 %க்கு எதிராக, தமிழகத்தின் செலவு பட்ஜெட்டில் 5.4% ஆகும். ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனிற்கான செலவு குஜராத் மாநில வருமானத்தில் 0.8% ஆகும், (Normal spending by a state is 4-5%) . அதனால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, தாய் இறப்பு போன்ற அனைத்து சுகாதார குறியீடுகளிலும் குஜராத் மிக மோசமாகவே உள்ளது. கோவிட் சமயத்தில் குஜராத் அரசு மருத்துவமனைகளின் மிக மோசமான பராமரிப்பை பார்த்து இதென்ன மருத்துவமனையா குடோனா என்று குஜராட் கோர்ட் கேள்வி கேட்டது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

குஜராத்தின் 93-94% தொழிலாளர்கள் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சமூக பாதுகாப்புடன் முறைசாரா (Informal Sectors) வேலை வாய்ப்பு அளிக்கும் துறைகளில் உள்ளனர். ஆனால் திராவிட மாடல் நிர்வாகம் நடக்கும் தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் மட்டுமே முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர். இது தமிழ்நாட்டில் அதிகம் பேர் படித்து படிப்புக்கேற்ற வேலைக்கு செல்கிறார்கள் என்பதற்கான அடையாளம் ஆகும்.

குஜராத்தில் 40-45% குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இயற்கை வளங்களைச் சார்ந்திருந்தாலும் (விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால், காடுகள், மீன்வளம் போன்றவை) கார்போரேட்டுகளின் அபரிதமான தொழில் வளர்ச்சியால் இயற்கை வளங்கள் பெருமளவில் சூறையாடப்பட்டு, உடல் நலத்தை நாசமாக்கும் கடுமையான மாசடைந்த சுற்றுப்புற சூழல் உருவாகியுள்ளது. மேலும் கார்போரேட்டுகளின் அபரிதமான தொழில் வளர்ச்சியால் பழங்குடியின மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் கூட இல்லாமல் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தின் போது குஜராத்தில் வாழும் இப்படிப்பட்ட மக்களின் வாழ்விடத்தை குஜராத் அரசாங்கம் துணி கட்டி மறைத்ததை நாம் அனைவரும் அறிவோம்.
40% மக்கள் குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். ஆனால் திராவிட மாடல் நிர்வாகம் நடக்கும் தமிழ்நாட்டில் 4.89 % மக்களே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்.

அறிவார்ந்த தமிழக நிதி அமைச்சர் திரு PTR பழனிவேல் ராஜன் அவர்களின் சீரிய நிதி நிர்வாகத்தால் 2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 4.61% இலிருந்து 3.80% ஆகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் (இருவரும் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்கள்) போன்ற உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் நிதி நிர்வாகத்தை நடத்தும் ஒரே மாநில அரசு திராவிட மாடல் அரசான தமிழக அரசு மட்டுமே. 2022-23 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் நிகர பொதுக் கடன் ₹90,116.52 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மார்ச் 31, 2023 அன்று மாநிலத்தின் மொத்த கடன் நிலுவைத் தொகை ₹6,53, 348.73 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கடன்-ஜிஎஸ்டிபி விகிதம் 26.29% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நிதி ஆணையம் நிர்ணயித்து இருக்கும் கடன் வரம்பை மீறாமல் வரம்புக்குள் அடங்கியே இருக்கும். மற்ற மாநில நிதி நிர்வாகத்தில் காண முடியாத விஷயம் இது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இதற்கு எல்லாம் மகுடம் வைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் ஒருங்கே கண் காணிக்கும் CM Dashboard என்ற மின்னணுவியல் முறையிலான (E GOVERNANCE) நிர்வாக முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் முன்னேற்றத்தை தினமும் கண்காணித்து தேவையான வழிகாட்டுதல்களை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். கார்ப்பரேட்டுக்களை மட்டுமே கொண்டாடிய குஜராத் மாடல் நிர்வாகத்தில் பெரும் பயனாளிகளாக இருந்தவர்கள் மத்திய வகுப்பு மற்றும் உயர் மத்திய வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே . குஜராத் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருந்த இவர்களால்தான் மோடியால் மூன்று முறை வரிசையாக குஜராத்தை மாநிலத்தில் முதல்வராக முடிந்தது. இப்படி உயர் மத்திய மற்றும் மத்திய வகுப்பை சேர்ந்தவவர்களின் வாழ்க்கை தரம் உயர மட்டுமே இந்த குஜராத் மாடல் நிர்வாகம் உதவியது. ஏழைகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தின் போது குஜராத்தில் வாழும் ஏழைகள் வாழ்விடத்தை துணி கட்டி மறைத்ததே இதற்கு நல்ல உதாரணம். மேலும் தமிழகம் போன்ற இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட குஜராத் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவு செய்தது மிக மிக குறைவு. மோடிக்கு முன் இருந்த குஜராத் முதலமைச்சர்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருந்தனர்.நகர்ப்புற வறுமையை நிவர்த்தி செய்யும் வகையில் கொள்கைகளை வடிவமைத்தனர், ஆனால் மோடி நகரங்களில் ஏற்கனவே நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழும் வாழும் மத்திய வகுப்பு மற்றும் உயர் மத்திய வகுப்பை சேர்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் மட்டுமே தன்னுடைய குஜராத் மாடல் நிர்வாகத்தை வடிவமைத்தார். ஏழைகளின் வாழ்வை பற்றிய எந்த அக்கறையும் குஜராத் மாடல் நிர்வாகத்தில் மருந்துக்கும் கூட இல்லை.

ஆகையால் மூளை செத்த முட்டாள் சங்கிகள் ரொம்பவும் சிலாகிக்கும் ” குஜராத் மாடல் நிர்வாகம்” கார்போரேட்டுகளை மட்டுமே கொண்டாடிய ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட ஒரு மாய பிம்பம் மட்டுமே. எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூக நீதி கோட்பாட்டை தூக்கிப்பிடித்து அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அருமையான பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் திராவிட மாடல் நிர்வாகத்தின் முன் குஜராத் மாடல் நிர்வாகம் என்பது முட்டாள் சங்கிகள் மட்டுமே சிலாகித்து கொண்டாட கூடிய ஒரு டுபாக்கூர் மாடல் அவ்வளவே. இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் மாடலை மிக பெரிதாக விளம்பரப்படுத்தி வெற்று விளம்பரங்களால் ஆட்சிக்கு வந்தவர்கள் அறிவார்ந்த திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்க தகுதியே இல்லாதவர்கள் .

சொல்லப்போனால் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் அளவிலான மிக சிறப்பான ஒரு மாநில நிர்வாகத்தை செய்து கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு என்று தமிழர்களாகிய நாம் அனைவரும் மிகவும் பெருமை பட வேண்டும் . கொண்டாட வேண்டும்.

விமலாதித்தன் மணி

 

error: Content is protected !!