பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமா பாரதி உள்ளிட்ட அனைவரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர் களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக் கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம்சாட்டப் பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந் தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத் தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியாக, அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராயினர். இம் மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வழங்கிய தீர்ப்பில் பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.