வெஸ்டர்ன் டாய்லெட்டை அவாய்ட் பண்ணிடுங்க! இல்லையேல் சுத்தமாகவாவது வைக்கவும்!
இப்போதெல்லாம் பல வீடுகளில் கழிப்பறை வசதி வந்துவிட்டது. இருந்தாலும், இயல்பாகவே பலருக்கும் இருக்கிற அந்நிய மோகம், கழிப்பறையையும் விட்டுவைக்கவில்லை. `எங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட்’ என்று பெருமை பொங்கச் சொல்பவர்களும் உண்டு. ரயில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என எல்லாப் பொது இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக அளவில் பயன்படுத்தப்படுவது இந்தக் கழிவறைகளே! மேற்கத்திய பாணி கழிவறையை உபயோகப்படுத்துவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது ஒருபுறம் இருக்கட்டும்… `மனிதர்களின் இயல்பான குத்த வைத்து அமரும் நிலையில் (Squatting Method) மலம் கழிப்பதே சிறந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள்
காரணம் கால்மூட்டுகள் வளைந்து, பிட்டம் பாதத்துக்கு அருகில் இருக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, மேல் உடம்பை வளைத்து, குந்தியிருக்கும் நிலைதான் (Squatting Position) ஓர் இயற்கையான காலைக் கடன் கழிக்கும் முறை. மனிதன் பூமிக்கு வந்த நாளில் இருந்து அன்றாடக் கடனைத் தீர்க்கும் முறை இப்படித்தான். கருவில் இருக்கும்போதே குழந்தை இந்த நிலையில்தான் இருக்கும். மனிதனின் நாகரிகம் வளர்ந்து, தனக்கென வீடு, உடை, உணவுக்கு வேளாண்மை, தனிமனித-சமூக ஒழுக்கங்கள் எல்லாம் மேம்பட்ட நிலையிலும் குந்தவைத்து அமர்ந்துதான் காலைக் கடனைக் கழித்தான். இந்த நிலையில் அமர்வதால், மனிதர்களுக்குக் கிடைக்கும் அரிய நன்மைகள் குடல் நோய்கள், மலச்சிக்கல், இடுப்புத் தசை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்பதே!
ஆயுர்வேதத்தில் இப்படி அமரும் நிலையை `மலாசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி அமர்ந்தால், மலம் வெளியேறுவது எளிதாக நடைபெறும். மலாசனத்தில் குந்தவைத்து அமர்வதன் மூலம், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாகும். மலாசனத்தின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், தசைகள் வலிமையடையும். மூலநோய் வராமல் தவிர்ப்பதும் சாத்தியம்.
இனி, மேற்கத்திய பாணி டாய்லெட்டுக்கு வருவோம்… இது கண்டுபிடிக்கப்பட்டது 16-ம் நூற்றாண்டில்! ஆரம்பத்தில் அதற்கான மாதிரி வடிவமே கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு சிம்மாசனத்தில் ஒரு பெண்ணோ, ஆணோ அமர்ந்திருப்பதுபோல வடிவமைத்திருந்தார்கள். ஆனால், விற்பனையில் சோபிக்கவில்லை. ராயல்டி… அதனால் அதிக விலை என்று மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பக்கம் போகாமல் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே மெள்ள மெள்ள ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குள் ஆழமாக ஊடுருவிட்டது இந்த பாணி. புழக்கத்துக்கு வந்த பிறகு, 19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களுக்கு இது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த பாணி கழிப்பறைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது.
சில பத்து வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் குடல் சம்பந்தமான அப்பெண்டிசைட்டிஸ், மலச்சிக்கல், மூலநோய், இர்ரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் பரவலானதற்கு காரணங்கள், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள். இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்… அது, வெஸ்டர்ன் டாய்லெட். அதாவது, மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்து மலம் கழிப்பது, மனித உடல் அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள். அதனாலேயே இதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கு மாற்றாக இருப்பது, நம் பழைய பாணி குந்தவைத்து காலைக்கடன் கழிக்கும் முறையே!
அதே சமயம் `எங்களுக்கு வேறு வழியில்லை… வெஸ்டர்ன் டாய்லெட் வசதிதான் இருக்கிறது’ என்கிறவர்கள் ஒன்று செய்யலாம்… கால்களுக்குக் கீழே முக்காலிருந்து ஓர் அடி உயர ஸ்டூலைப் போட்டு, அதில் கால்களை வைத்துக்கொண்டு மலம் கழிக்கலாம். பிரச்னை இல்லாமல் இருக்கும்.
மேலும் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் இப்படி தான் பயன் படுத்தனும் னு ஏகப்பட்ட Youtube videos , blog articles என்று நிறையவே இருக்கிறது. அது இல்லாமல் twitter மற்றும் facebook ல நிறைய பேர் தெளிவு படுத்தி இருக்கிறார்கள் அதை எல்லாம் cut short செய்து சுருக்கமா சொல்வது இதுதான்.
உங்கள் வீட்டில் , வெஸ்டர்ன் டாய்லெட் ல ஆண்கள் , குழந்தைகள் யார் யூரின் போக நேர்ந்தாலும் கட்டாயம் டாய்லெட் சீட்டை தூக்கிட்டுதான் போக வேண்டும் . அது பெண்களுக்கானதும் கூட என்பதை மனதில் கொள்ளுங்கள் .
காரணம் :
நிறைய ஆண்கள் , ஆண் குழந்தைகள் நின்ற படி சிறுநீர் கழிப்பதால் இந்த Lid , சீட் , சீட் கவர் என அனைத்து இடமும் urine பட நேரிடும் . இதனால் அந்த டாய்லெட்டை உபயோகிக்கும் பெண்களுக்கு சிறுநீர் தொற்று எளிதாக ஏற்படும். எனவே வெஸ்டர்ன் டாய்லட் உபயோகிக்கும் யாரும் அமர்ந்த நிலையில் அதை உபயோகிப்பதே சரியானது. அப்படியும் முடியாத பட்சத்தில் , அந்த Lid தூக்கி விட்டு பயன் படுத்தினால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு தான் நல்லது . Flush செய்யும் போது , உள் பகுதி மட்டும் தான் சுத்தம் ஆகும் . எனவே மிக முக்கியமாக urine போன பிறகு , ஒரு mug தண்ணீர் அந்த Lid மேல ஊற்றிவிட்டு வந்தால் உங்கள் toilet நோய் தோற்று இல்லாமல் இருக்கும்
என்ன தான் சொந்த வீடாக இருந்தாலும் , அந்த lid கையில் எடுத்து பயன் படுத்த சங்கட்டமா இருக்கும். அதற்கு தான் Toilet Lid Lifter With Handle னு ஒரு product இருக்கு . அதை வாங்கி உங்க toilet upper lid ல பொருத்தி விட்டால் போதும் . யார் வேண்டுமானாலும் அதை எளிதாக பயன் படுத்திக்கலாம் . இது சிலிகான் , பிளாஸ்டிக் னு நிறைய மாடல் ல இருக்கு . வாரம் ஒரு முறை கழட்டி சுத்தமா சோப்பு போட்டு கழுவி கொள்ளலாம். விலையும் குறைவு தான் உங்களுக்கு எது பிடித்ததோ அதை வாங்கி கொள்ளலாம் .
நிலவளம் ரெங்கராஜன்